எலி, அணில்களிடம் இருந்து தேங்காய்களை காப்பாற்ற இப்படியும் செய்யலாம்...

Let do this to save the coconuts from rats and squirrels ...
Let do this to save the coconuts from rats and squirrels ...



எலி, அணில்களிடம் இருந்து தேங்காய்களை காப்பாற்ற, தென்னை மரங்களுக்கு அலுமினியத்தில் வளையம் அணிவிக்கலாம். 

திருப்பூர், கோவை மாவட்டங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தென்னை மரத்தில் உள்ள குரும்பைகளை எலிகள் மற்றும் அணில்கள் கடித்து, சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தேங்காய், காய் பிடிக்காது.

இதற்கு தீர்வு

தென்னை மரங்களில், இரண்டு அடி உயரத்துக்கு, அலுமினியத்தால் செய்யப்பட்ட வளையத்தை, மரத்தை சுற்றிலும், பட்டையாக மாட்டுவதால் மரத்தில் போதிய பிடிப்பு கிடைக்காமல், வழுக்கு வதால், மர எலி, அணில் உள்ளிட்டவை மேலே ஏற முடியாது. 

அலுமினியத்தில், இவை அமைத்த பின், தற்போது, தேங்காய்களை காப்பாற்ற முடியும். எலி, அணில்களால், ஒரு மரத்தில் கிடைக்கும் காய்களில், நான்கில் ஒரு பங்கு, வீணாகும். ஒரு சில மரங்களில் ஓட்டை அமைத்து, குருத்தையும் சாப்பிட்டு விடும். 

இதற்கு தீர்வு காண, அலுமினிய, ‘ஷீட்’ வாங்கி, இரண்டு அடி உயரம் என்ற அளவில், மரத்துக்கு, காயம் ஏற்படாமல், ஆணி அடித்து, வளையம் போல் பொருத்தலாம். 

இதனால், எலி, அணில்களால் மரத்தின் மேல் ஏற முடியாது. இனி, ஒரு குரும்பை கூட கீழே விழாது. முழு மகசூல் கிடைக்கும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios