விளை நிலங்களா? விலை நிலங்களா?

land is-the-result-land-is-the-price


ஏராளமான விவசாய விளைநிலங்கள் விலை நிலங்களாக மாற்றபட்டுக் கொண்டு இருக்கும்போது, பயனற்றதென கிடக்கும் தரிசு நிலங்களிலும் நம்மால் சிறப்பாக சாகுபடி செய்யமுடியும் என விவசாயிகளை ஊக்கபடுத்தி ஆலோசனை சொல்லி வழிநடத்தி வருகிறது தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தின் கிழே இயங்கும் கரூரில் உள்ள வன தோட்ட துறை.

ஒப்பந்த முறை சாகுபடியில் விவசாயிகள் நல்ல இலாபம் பெற மிக குறைந்த அளவு நீர் தேவைகளே உள்ள சவுக்கு, தைல மற்றும் மலைவேம்பு, குமிழ் மாற கன்றுகளை வழங்குகிறார்கள்.

உதாரணமாக சவுக்கு சாகுபடியை எடுத்து கொண்டால், சவுக்கு 3 அல்லது 4 வருட பயிர்.

கடும் வறட்சியை தாங்ககுடியது, 4 வருடத்தில் ஏக்கருக்கு சுமார் 60 முதல் 80 டன் வரை மகசூல் பெற முடியும்.

இப்போதைய மார்க்கெட் விலை டன்னுக்கு சுமார் 2500 வரை கிடைக்கிறது.

எப்படி பார்த்தாலும் ஏக்கருக்கு சுமார் 1 .5 இலட்சம் ருபாய் மிக எளிதாக எவ்வித முதலிடும் இன்றி பெற முடியும்.

மலை வேம்பு, குமிழ் போன்றவைகள் மூலம், சவுக்கை விட மிக அதிக லாபம் பெறமுடியும்.

இப்போது உங்கள் முறை உங்களது நிலத்தை விளை நிலங்களாக்குவதும், விலை நிலமாக்கி பிளாட் போடுவதும் உங்கள் கையில்…

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios