பப்பாளியின் மகசூலை கெடுக்கும் கள்ளிப்பூச்சகளை இப்படியும் ஒழிக்கலாம்...
பழனி தொப்பம்பட்டி பகுதியில் பப்பாளி மரங்களில் கள்ளிப்பூச்சிகள் தாக்குதல் அதிகமாக இருக்கும். இது சாறு உறிஞ்சும் பூச்சி வகையை சார்ந்தது. மஞ்சள் நிற உடலுடன் மெழுகு போன்று பால் நிறத்தில் காணப்படும்.
இதனால் பாதிக்கப்பட்ட பப்பாளி செடியின் தரைப்பகுதிக்கு மேல் இலை, தண்டுப்பகுதி, பழம் ஆகியவை பருத்தி இலை போன்று கொத்தாக காணப்படும்.
தேன் போன்ற திரவத்தை உடலில் சுரப்பதால் கருமைநிற பூஞ்சாணம் வளரும்.
இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றி மகசூல் பாதிக்கப்படும்.
இதற்கான பாதுகாப்பு முறைகளில் வயலை சுத்தம் செய்வது முக்கியம்.
வயலை சுற்றி பார்த்தீனியம், செம்பருத்தி செடிகள் இருந்தால் அப்புறப்படுத்தி, காய்ந்த செடி, இலைகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
உயிரியல் முறையில் “அசிரோபேகஸ் பாபாயே’ என்ற ஒட்டுண்ணியை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு வேப்பெண்ணெய் 2 சதவீதம், அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் அல்லது மீன் எண்ணெய் தூள் 25 கிராம் கலந்து தெளிக்கலாம்.
ரசாயன பூச்சிக்கொல்லியான குளோர் பைரிபாஸ், புரேபனோபாஸ் பயன்படுத்தியும் இவற்றை கட்டுப்படுத்தலாம்.