உங்கள் வீட்டில் கொஞ்சமாக இடம் இருந்தாலே போதும்! நீங்களே தோட்டம் அமைக்கலாம்...
வீட்டில் காய்கறித் தோட்டம்
முதலில் கொஞ்சம் வெயில் அதிகம் படும் இடமாகத் தேர்வு செய்யுங்கள். எந்த வகை மண் நல்லது? களி மண் இல்லாத பட்சத்தில் சரி. மண் கட்டிகள் இல்லாமல் சமன் செய்து கொள்ளவும். சிறந்த வடிகால் வசதி தேவை.
பொதுவாகக் கீரையை எடுத்துக் கொள்வோம். நாற்றங்கால் பெரிதாகத் தேவையில்லை. 25 முதல் 30 நாளில் வீட்டுத் தோட்டத்தில் கீரைதயார். கீரை விதைகளை விதைக்கும்போது கவனம் தேவை.
எறும்புகள் தொல்லை தரும். அடியுரமாக நன்கு மக்கிய கம்போஸ்ட் உரங்களை (இயற்கை உரம்) இடுங்கள். தேவைப்பட்டால் கடலைப் பிண்ணாக்கு + வேப்பம் பிண்ணாக்கு கலந்து இடலாம். உங்களுக்கு எந்தக் கீரை வகை பிடிக்கிறதோ அதை நீங்கள் வீட்டுத் தோட்டத்தில் நடலாம்.
வெண்டை, கத்திரி, மிளகாய், தக்காளி இவை பொதுவாக ஒரு வயதுடைய காய்கறிப் பயிர்கள். இடைவெளி விட்டு நட்டுப் பயன்பெறலாம். இவை 45 முதல் 120 நாள் வரை காய்கள் தரும். பூச்சித் தொல்லை இருப்பின் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். இரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் தவிர்ப்பது நலம்.
காய்கறி விதைகளைக் கடைகளில் விசாரித்து வாங்குங்கள். காய்கறிச் செடிகளை வளர்ப்பதற்காகத் தற்போது கன்டைனர்கள் உள்ளன. அவற்றையும் பயன்படுத்தலாம். புடலங்காய், பாகற்காய் இவையேயல்லாம் படரும் தாவரம். எனவே படர்வதற்குப் பந்தல் தேவை.
கம்பு மற்றும் ஸ்டீல் கொண்டு நீங்கள் பந்தல் அமைக்கலாம். உங்கள் வீட்டின் வசதியைப் பொறுத்துப் படரும் தாவர காய்கறி வகைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். பழைய சாக்கு, பயனற்ற டிரம் இவற்றில் மண் நிரப்பி நீங்கள் வாழை, பப்பாளி வளர்க்கலாம்.