குறைந்த முதலீட்டில் ஆடுகளை இந்த முறைகளில் நன்றாக வளர்க்கலாம்...
1.. சுழற்சிமுறை மேய்ச்சல்
** தற்காலிகத் தடுப்புகள் மூலம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களில் இம்முறையை பின்பற்றலாம்.
** இம்முறையில் ஆடுகள் படிப்படியாக ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவிற்கு மாற்றப்படும். இவ்வாறு முழு மேய்ச்சல் நிலத்தில், மேய்ச்சல் செய்தால், மேய்ச்சல் நிலத்தின் முதல் பகுதியில் புற்கள் வளர்ந்து, இரண்டாம் மேய்ச்சலுக்குத் தயாராகிவிடும்.
** இதனால் ஒட்டுண்ணிகளின் தாக்கம் குறையும் அல்லது கட்டுக்குள் இருக்கும்.
** மேலும் தரமான புற்கள் வருடம் முழுவதும் ஆடுகளுக்கு மேய்ச்சல் மூலம் கிடைக்க ஏதுவாகும்.
** இந்த முறையில் முதலில் குட்டிகளை மேயவிட்டு, பின்னர் பெரிய ஆடுகளை மேயவிட்டால் குட்டிகள் மேய்ந்து மீதமுள்ள அனைத்து புற்களையும் பெரிய ஆடுகள் தின்றுவிடும்.
2.. மேய்ச்சல் கலந்த கொட்டில்முறை
** இம்முறை குறைவான மேய்ச்சல் நிலம் உள்ள இடங்களில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு ஏற்றதாகும்.
** இம்முறையில் வேலியிடப்பட்ட மேய்ச்சல் நிலத்தில் குறைந்த நேரம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வளர்க்கப்படுகின்றன.
** இம்முறையில், கொட்டகையில் தீவனமளித்தல், இரவில் ஆடுகளை கொட்டகையில் அடைத்தல், 3 முதல் 5 மணி நேரம் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.
** இம்முறையில் தீவனச்செலவு சற்று அதிகம் ஆகும்.
** மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் மூலம் ஆடுகள் தங்களது ஊட்டச்சத்து தேவையினை பூர்த்தி செய்துகொள்ள இயலும்.
** 50 முதல் 350 ஆடுகள் வரை இம்முறையில் வளர்க்கலாம்.
** வறட்சி காலத்தில், பயிரிடப்பட்ட புற்களை / புல் வகைகளை உட்கொள்ளுதல்
** நல்ல தரமான குட்டிகளின் மூலம் இறைச்சி மற்றும் பால் கிடைக்கும்
** குறைந்த வேலையாட்களே தேவைப்படுவதால் செலவு குறைவு, லாபம் அதிகம்.
3.. கொட்டகை முறை
** இம்முறை ஆடுகளை நாள் முழுவதும் கொட்டகையினுள் அடைத்து தீவனம் கொடுத்து வளர்த்தலே ஆகும்.
** இம்முறையில் ஆடுகளை வெளியில் சுதந்திரமாக விட்டு வளர்ப்பது குறைவு
** இம்முறையில் சுமாராக 50 முதல் 250 ஆடுகள் வரை வளர்க்கலாம். பாலுக்காக வளர்க்கப்படும் ஆட்டினங்களுக்கு இம்முறை உகந்தது.
** இம்முறையில் ஆடுகளுக்கு வேளாண் கழிவுப்பொருட்களை இணைத்து கொடுத்து, ஒரு எக்டருக்கு 37 முதல் 45 ஆடுகள் வரை வளர்க்கலாம்.
** இம்முறையில் நிறைய வேலையாட்கள் மற்றும் பணம் தேவைப்படும்
** இம்முறையில் ஆடுகளை நெருங்கி கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் இயலும்.
** இம்முறையில் ஆட்டுப்புழுக்கைகள் / ஆட்டுச்சாணம் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு, நல்ல உரமாகிறது.
** நிறைய ஆடுகளுக்கு குறைந்த இடவசதி போதுமானது.