நேரடி நெல் விதைப்பில் இப்படி உர நிர்வாகம் செய்தால் கூடுதல் விளைச்சல் பெறலாம்…
விதைக்கும் கருவி மூலம் சகதியில் நேரடி நெல் விதைப்பு செய்வதில் சரியான உர நிர்வாக முறைகளை கையாள்வதால் நடவு பயிருக்குச் சமமான அல்லது அதற்கு மேற்பட்ட விளைச்சல் அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன்.
குறுவை சாகுபடி:
குறுவைக்கு ஒரு ஏக்கருக்கு 50 கிலோ தழைச்சத்து 20 கிலோ சாம்பல் சத்து பரிந்துரைக்கப்படுகிறது. குறுவையில் அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ மணிச்சத்து (125 கிலோ சூப்பர்) மற்றும் 10 கிலோ சாம்பல் சத்து (16 கிலோ பொட்டாஷ்) இடவேண்டும்.
விதைப்பு செய்த 20-ம் நாள் ஒரு ஏக்கருக்கு 9 கிலோ தழைச்சத்து (20கிலோ யூரியா) 40-ம் நாள் 16 கிலோ தழைச்சத்து (35 கிலோ யூரியா) 60-ம் நாள் 16 கிலோ தழைச்சத்து (35 கிலோ சாம்பல் சத்தும் (16 கிலோ பொட்டாஷ்) முதல் பூ தோன்றும் நிலையின் போது 9 கிலோ தழைச்சத்தும் (20 கிலோ தழைச்சத்தும் (20கிலோ யூரியா) இடவேண்டும்.
சம்பா: சம்பாவிற்கு ஒரு ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்து 24 கிலோ மணிச்சத்து மற்றும் 24 கிலோ சாம்பல் சத்து பரிந்துரைக்கப்படுகிறது. அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 24 கிலோ மணிச்சத்து (150 கிலோ சூப்பர்) மற்றும் 12 கிலோ சாம்பல் சத்து (20 கிலோ பொட்டாஷ்) இடவேண்டும்.
பிறகு விதைப்பு செய்த 20-ம் நாள் ஒரு ஏக்கருக்கு 12 கிலோ தழைச்சத்து (26 கிலோ யூரியா) 40-ம் நாள் ஒரு ஏக்கருக்கு 12 கிலோ தழைச்சத்து (26 கிலோ யூரியா) 40-ம் நாள் 12 கிலோ தழைச்சத்து (26 கிலோ யூரியா) 60-ம் நாள் 12 கிலோ தழைச்சத்து (26 கிலோ யூரியா) , 90-ம் நாள் 12 கிலோ தழைச்சத்து (26கிலோ யூரியா) மற்றும் 12 கிலோ சாம்பல் சத்து (20 கிலோ பொட்டாஷ்) இடவேண்டும். முதல் பூ தோன்றும் போது 12 கிலோ தழைச்சத்து (26 கிலோ யூரியா) இடவேண்டும்.
அடியுரம்:
ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் மற்றும் துத்தநாக சல்பேட்டை அடியுரமாக இடலாம். சகதியில் நேரடி நெல் விதைப்பு செய்யும்போது தழைச்சத்தினை அடியுரமாக இட தேவையில்லை.
தழைச்சத்து உரமான யூரியா நீரில் கரையக்கூடியது. அதனால் அதிக இழப்பு ஏற்பட்டு பயிருக்கு கிடைக்காமல் போகிறது. இதற்கு யூரியாவை முதல் மேலுரம் இடும்போது, ஜிப்சம், வேப்பம்புண்ணாக்குடன் 5:4:1 என்றவிகிதத்தில் கலந்து இட வேண்டும்.
உயிர் உரங்கள்:
விதைப்பிற்கு முன்பு ஏக்கருக்கு 4 பொட்டலங்கள் முறையே அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இவற்றை நன்கு மக்கிய பொடிதொழு உரத்துடன் வயலில் தூவவேண்டும். மேற்கண்ட உர நிர்வாக முறைகளை பின்பற்றினால் கருவி மூலம் சக்தியில் நேரடி நெல் விதைப்பு செய்வதில் நல்ல விளைச்சலும் லாபமும் பெறலாம்.