இறால் வளர்த்து விற்றால் வருடத்திர்கு இத்தனை இலட்சம் லாபம் கிடைக்கும்...
இறால் விற்பனை
60-ம் நாளிலிருந்து 80-ம் நாளுக்குள் 400 கிலோ அளவுக்கு இறாலைப் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 10 கிராம் முதல் 20 கிராம் வரை எடை இருக்கும். 90-ம் நாளிலிருந்து 100 நாட்களுக்குள் 1,250 கிலோ அளவுக்கு இறால் பிடித்து விற்பனை செய்யலாம்.
இந்த சமயத்தில் ஒரு இறால், 25 கிராம் அளவில் இருக்கும். ஒரு ஏக்கர் குளத்தில் சராசரியாக 1,650 கிலோ அளவுக்கு இறால் கிடைக்கும்.
அறுவடை முடிஞ்ச பிறகு, குட்டையை காயவிட்டு மீண்டும் நீர் நிரப்பி இறால் வளர்க்கலாம். முதல் தவணையில பிடிக்கிற இறால், கிலோ சராசரியா 250 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும்.
தஞ்சாவூர்ல நேரடியா விற்பனை செய்துவிடலாம். உயிரோட இறால் கிடைக்கறதால உடனடியா வித்துடும். ரெண்டாம் தவணை பிடிக்கிற இறாலை கிலோ 300 ரூபாய்னு வியாபாரிகளுக்கு வித்துடும்.
இது மூலமா, மொத்தம் ஏக்கருக்கு நாலே முக்கால் லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, எல்லா செலவும் போக, 2 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
இதுபோல, ஒரு ஏக்கர் குட்டையில, வருஷத்துக்கு ரெண்டு தடவை இறால் வளத்து, 4 லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் பார்க்கலாம்.
தஞ்சாவூரில் உள்ள மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இறால் வளர்ப்புப் பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.