விதை பரிசோதனை செய்தால் அதிக மகசூல் பெறலாம். எப்படி?
நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை பரிசோதனை செய்வதன்மூலம் அதிக மகசூலைப் பெறலாம்.
கார்த்திகைப் பட்டத்தில் இறவை நிலக்கடலையை விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம்.
நிலக்கடலை சாகுபடியில் அதிக செலவு ஆகும் இடுபொருள் “விதை” மட்டுமே. எனவே தரமான விதையாக இருந்தால் தேவையான அளவு பயன்படுத்திச் செலவை பலமடங்கு குறைக்கலாம்.
குறைந்தபட்ச முளைப்புத்திறன் 70 சதவீதம் இருந்தால்தான், இப்போது கிடைக்கும் மகசூலை விட 50 சதவீதம் கூடுதலாக மகசூல் பெற முடியும். எனவே, விவசாயிகள் தங்களிடம் இருப்பில் இருக்கும் நிலக்கடலை விதையில் ஒரு கிலோ அளவுக்கு மாதிரியினை எடுத்து விதை பரிசோதனை அலுவலகத்தில் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்கு ஆகும் செலவு ரூ.30 மட்டுமே.
இப்படி விதை பரிசோதனை செய்வதன் மூலம், நல்ல விதையைக் கண்டறிந்து அதிக மகசூலைப் பெறலாம்.