கால்நடைகளின் குடற்புழு நீக்கு மருந்து மற்றும் அமிர்தகரைசல் செய்யும் முறை இதோ...
1.. கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்
தேவையான பொருட்கள் :-
சீரகம் - 15 கிராம்
கடுகு - 10 கிராம்
மிளகு - 5
மஞ்சள் தூள் - 65 கிராம்
பூண்டு - 5 பல்
தும்பை இலை - ஒரு கைப்பிடி
வேப்பிலை - ஒரு கைப்பிடி
வாழைத்தண்டு - 100 கிராம்
பாகற்காய் - 50 கிராம்
பனைவெல்லம் - 150 கிராம்
செய்முறை :-
சீரகம் , மிளகு, கடுகு ஆகியவற்றை இடித்து, அத்துடன் மற்றவற்றை சேர்த்து அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நூறு கிராம் கல் உப்பில் புரட்டி எடுத்து, நாக்கின் மேல் பகுதியில் வைத்தால் மாடு அதை விழுங்கி விடும். மொத்த உருண்டைகளும் ஒரு மாட்டுக்கானது. ஒரே நேரத்தில் கொடுக்கப்படவேண்டும். மாதம் ஒருமுறை அல்லது இருமாதத்திற்கு ஒருமுறை தரவேண்டும்.
2.. அமிர்த்த கரைசல்
தயாரிப்பு முறை:
மாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்) ஒருமுறை பெய்த மூத்திரம்?இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டுஅதில் ஒருகைப்பிடிவெல்லம், ஒருகுடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அமிர்த கரைசல் தயார். ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்துவிடலாம்.
அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.
பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம். வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.