How to prepare and use beejamirtham You can read this ...

பீஜாமிர்தம் 

விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும்.

தேவையான பொருட்கள்

தண்ணீர் 20 லிட்டர்

பசு மாட்டு சாணம் 5 கிலோ

பசு மாட்டு கோமியம் 5 லிட்டர்

சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்

ஜீவனுள்ள மண் ஒரு கைப்பிடி அளவு

தயாரிக்கும் முறை

முதல் நாள் மாலை 6 மணிக்கு மேற்ச் சொன்ன அனைத்தை பொருள்களையும் ஒன்றாக ஒரு கலனில் கலந்து வைத்துவிட வேண்டும்.

பின்னர் இந்த கலவையை மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும். இக்கலவையே பீஜாமிர்தம்மாகும். 

முதல் நாள் மாலையில் கலந்து வைத்தால் அடுத்த நாள் காலையில் இதை விதைகளின் மேல் தெளிக்கலாம்.

எப்படி பயன்படுத்துவது

விதை நேர்த்தி செய்ய வேண்டிய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை இந்த கரைசலில் நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.