வேப்ப விதையில் பூச்சி விரட்டி தயாரிப்பது எப்படி? படிச்சு தெரிஞ்சுக்குங்க...
வேப்ப விதைக் கரைசல் - இயற்கை பூச்சி விரட்டி
வேப்ப விதைக் கரைசல் தயாரிக்க ஏக்கருக்கு 3 முதல் 5 கிலோ ஓடு நீக்கப்பட்ட வேப்பம் பருப்பு தேவை. (புது விதை என்றால் 3 கிலோவும், பழைய விதை என்றால் 5 கிலோவும் தேவை) வேப்பம் பருப்பைப் பொடியாக்க வேண்டும்.
இதை காடாத்துணியில் மூட்டையாக கட்டி சுமார் 10 லிட்டர் தண்ணீர் உள்ள பானையில் ஓர் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதன்பின் இக் கரைசலை வடிகட்டினால் 6 முதல் 7 லிட்டர் வேப்பவிதைக் கரைசல் கிடைக்கும்.
இதை பயிருக்குத் தெளிக்கும்போது 10 லிட்டர் நீரில் 500 முதல் 1000 மி.லி. வரை பயன்படுத்தலாம். அதாவது 500 முதல் 1,000 மி.லி. கரைசலை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து 100 மி.லி. காதி சோப்புக் கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும்.
காதி சோப்புக் கரைசல் தாவரக் கரைசலின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கிறது. ஓர் ஏக்கர் பயிருக்கு 60 லிட்டர் வரை தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பானைப் பயன்படுத்தினால் 110 லிட்டர் பயன்படுத்த வேண்டும். கரைசலின் அடர்த்தியை பூச்சித் தாக்குதலின் தன்மைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.