இவற்றை பயன்படுத்தி கூட கோழிப்பண்ணை கழிவில் மக்கிய உரம் தயாரிக்கலாம்...

how to make fertilisers with these things
how to make fertilisers with these things


 

நார்க்கழிவு மற்றும் சிப்பிக் காளான் விதையை பயன்படுத்தி கூட கோழிப்பண்ணைக் கழிவில் மக்கிய உரம் தயாரிக்கலாம்.           

** குறிப்பிட்ட அளவு புதிய கோழிப்பண்ணைக் கழிவுகளை சேகரித்து, மக்குவதற்கு ஏதுவாக கரிமம்-தழைச்சத்தின் விகிதம் 25-30 உள்ளவாறு, உலர்ந்த நார்க் கழிவுடன் 1:15 விகிதத்தில் கலக்கப்படுகிறது. 

** சிப்பிக்காளான் விதை, ஒரு டன் கழிவுப்பொருளுக்கு 2 பாக்கெட்டுகள் என்ற விகிதத்தில் சேர்த்து பின் கலவை நிழலின் கீழ் குவியலாக்கப்படுகிறது. 

** குவியலின் ஈரப்பதம் 40-50% வரை பராமரிக்கப்பட்டு 21,28 மற்றும 35 ஆம் நாளில் இடைவிடாமல் கிளறிவிடவேண்டும். 

** 28-ஆம் நாள் கிளறும் போது சிப்பிக்காளான் விதை மீண்டும் ஒரு டன்னுக்கு 2 பாக்கெட்டுகள் சேர்க்கப்பட வேண்டும். 

** 45 நாட்களில் நன்கு தரம் உள்ள மக்கிய உரம் பெறப்படுகின்றது. 

மக்கிய உரத்தில் உள்ள சத்துக்கள் .

தழைச்சத்து   :   2.08%

மணிச்சத்து    :   2.61%

சாம்பல்ச்சத்து :  0.94%

கரிம - தழைச்சத்து விகிதம்  : 13.54

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios