ரசாயன முறைகளில் எலிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
நெல் வயலில் எலிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து அவற்றை முறையாகச் செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பை முழுவதும் தடுக்க முடியும்.
புரோமோடையலான்:
புரோமோடையலான் கேக்குகளை எலிகள் சாப்பிட்டால் இரத்தம் உறைதலை தடைசெய்யும்.
இவற்றை ஒரு தடவை சாப்பிட்டால் போதும். எலிகள் இரத்தம் கசிந்து இறந்துவிடும்.
வார்பரின்:
இதுவும் இரத்தம் உறைதலை தடை செய்கிறது. நான்கு முதல் 5 நாட்கள் தொடர்ந்து வைக்க வேண்டும்.
சிங்க் பாஸ்பைடு:
பாஸ்பைன் வாயு வெளிவந்து இரத்தத்துடன் கலந்து பிராணவாயு வெளியேற்றப் படுகிறது.
இந்த சிங் பாஸ்பைடு நஞ்சை 100 கிராம் அளவில் தயாரிக்க கீழ்க்காணும் பொருட்கள் தேவை.
சிங்க்பாஸ்பைடு – 5 கிராம்
உணவு எண்ணெய் – 15 கிராம்
பொடித்த தானியம் – 40 கிராம்
மாவுப் பொருள் – 40 கிராம்
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சிறு குச்சிக்கொண்டு நன்றாக கலந்து எலிகள் நடமாடும் இடங்களில் வைக்க வேண்டும்.
மருந்து கலந்த உணவை வைக்குமுன் 2 அல்லது 3 நாட்களுக்கு சிங்க்பாஸ்பைடு கலக்காத உணவை வைத்து எலிகளுக்கு நச்சுக்கூச்சத்தைப் போக்கி பழக்கப்படுத்திவிட்டு அடுத்த நாளே நஞ்சு உணவை வைக்க வேண்டும்.
இந்த முறைகளைப் பயன்படுத்தி எலிகளைக் கட்டுப்படுத்தலாம்.