கெண்டை மீன் வளர்ப்பு முறையில் எவ்வளவு இனங்கள் இருக்கு? தெரிஞ்சுக்க இதை வாசிங்க...
கூட்டுமீன் வளர்ப்பிற்கு பெருங்கெண்டை மீன் இனங்களே பரிந்துரைக்கப்படுகின்றன. அதற்கு பல காரணங்கள் உள்ளன.
பெருங்கெண்டை மீன் இனங்கள் தாவர உணவுகளையும், கழிவுகள் மற்றும் சிறிய விலங்கினங்களையும் உண்ணுகின்ன. எனவே இவ்வகை மீன்களை வளர்த்து அதிக உற்பத்தி பெறுவது எளிதாகும்.
மாறாக பிற மீன் இனங்களை உண்டு வளரும் மாமிசபட்சி இனங்களான விரால் போன்ற இனங்களை வளர்க்கும் போது குறைவான உற்பத்தியே கிடைக்கிறது. எனவே கெண்டை மீன் இனங்களை வளர்க்கும் போது அதிகளவில் உற்பத்தித் திறனை பெற முடியும்.
பல வகை கெண்டை இனங்களுள் வேகமாகவும், அளவில் பெரியதாகவும் வளரும் பெருங்கெண்டை மீன் இனங்களே வளர்ப்பிற்காக பரிந்துரைக்கப்படுகிறது.
நமது நாட்டில் கட்லா, ரோகு, மிர்கால், ஆகிய இந்தியப் பெருங்கெண்டை ஆகிய அயல்நாட்டு பெருங்கெண்டை இனங்களும், வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை மற்றும் சாதாக்கெண்டை ஆகிய அயல்நாட்டு பெருங்கெண்டை மீன் இனங்களும் கூட்டு மீன் வளர்ப்பில் பரிந்துரைக்கப்படுகின்றன.