பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
மாடு வளர்ப்போரின் சில சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்...
கேள்வி 1:
கலப்பின ஜெர்சி மாடு சினை பிடிக்க கால தாமதம் ஆகிறது. அப்படியே சினை பிடித்தாலும், நஞ்சுக் கொடி விழுவதில் பிரச்சனையாகிறது. இதனை தடுக்க என்ன செய்யலாம்?
பதில்:
சில மாட்டுக்கு கற்பபை பிரச்சனை இருக்கலாம். இதனை மருத்துவர் வந்து பார்த்து சொல்ல முடியும். சினை பிடிப்பதற்கு சில வழிமுறைகள் சொல்கிறேன். நஞ்சுகொடி விழுவதற்கு ரீபிளாண்டன் என்ற மருந்து 100 கிராம் வாங்கி 50 கிராமை வெல்லத்துடன் கலந்து கொடுஙக்ள்.
இதைப்போலவே மாலை வேளையில் கொடுங்கள். இப்படி கொடுக்கும் போது நஞ்சுக்கொடியும் விழுந்துவிடும். கற்ப்பையும் சுத்தமாக இருக்கும் போது விழுந்துவிடும். மேற்சொன்ன மருந்தை இரண்டு மூன்று நாட்களுக்கு கொடுங்கள்.
கேள்வி 2:
மாடுகளுக்கு கால் நோய்/ வாய் நோய் தடுப்பூசி எந்தெந்த காலத்தில், எந்தெந்த பருவத்தில் போட வேண்டும்?
பதில்:
மழைக்காலம் வருவதற்கு முன்பு தடுப்பூசி போடுவது அவசியம். கால் நோய், வாய் நோய் வந்த பின்பு தடுப்பூசி போடுவதை தவிர்க்க வேண்டும். மூன்று மாத கால இடைவெளியில் கால்நடைகளுக்கு குடல் புழு மருந்தை கொடுத்து வரவும்.
கேள்வி 3:
மாடுகளுக்கு எப்போது தடுப்பூசி போட வேண்டும்?
பதில்:
மழைக்காலம் வருவதற்கு முன்பு தடுப்பூசி போடுவது அவசியம். கால் நோய், வாய் நோய் வந்த பின்பு தடுப்பூசி போடுவதை தவிர்க்க வேண்டும். மூன்று மாத கால இடைவெளியில் கால்நடைகளுக்கு குடல் புழு மருந்தை கொடுத்து வரவும்.
கேள்வி 4:
பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட்டுவிட வேண்டும்?
பதில்:
கன்று பிறந்து பதினைந்து நாட்களுக்குள் கொம்பை சுட்டுவிடுவது நல்லது. காரணம், முதல் இரண்டு, மூன்று வாரங்களில் கொம்பை சுட்டுவிடும் போது அதற்கு வேதனை தெரியாமல் இருக்கும். மூன்று வாரங்களுக்கு மேற்பட்ட காலங்களில் செய்யும் போது மிகுந்த வேதனையை அனுபவிக்கும்.
பொதுவாக நிறைய மாடு வைத்திருப்பவர்கள், மாடுகளுக்கு இடையே சண்டை வந்து, கொம்பை உடைத்துக் கொள்வதை தவிர்க்கவே கொம்பை சுடும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள். ஒன்றிண்டு மாடுகளை வைத்திருப்பவர்கள் கொம்பை சுடுவது அவசியமில்லை.