நாட்டுக்கோழிகளை வேறு  எப்படி வளர்த்தல் நல்லது? ஒரு அலசல்...

How is it better to cultivate the countryside? A paragraph ...
How is it better to cultivate the countryside? A paragraph ...


கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். 

தினசரி காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம். முட்டையாக வாங்கி, கருவிகள்மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். 

முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின்,அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் தேவைப்படும். பராமரிப்பு முறைகள் பண்ணை வைக்கும்இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. 

அந்நிய பறவைகள் மூலம்தான்கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள்இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. 

பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல்பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள்கோழிகளை பாதிக்காது.

முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும். 48நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம்.

எடை அதிகரிக்க குஞ்சுகளின்வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றைபொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 

45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையைபொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின்ருசியும் அதிகரிக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios