பால் பண்ணைக்கான  மாட்டு இனங்களை தேர்வு செய்யும் முறை இதோ..

Here how to choose cow breeds for dairy farms
Here how to choose cow breeds for dairy farms


1..  பால் பண்ணைக்கான மாட்டு இனங்களை தேர்வு செய்யும் முறை

** இந்திய சூழ்நிலையில், ஒரு பால் பண்ணைக்கு குறைந்த அளவு 20 மாடுகள் (10 பசு, 10 எருமை) இருக்க வேண்டும். 

** இதனை 100 என்ற எண்ணிக்கைக்கு நீட்டிப்பு செய்யலாம் (50 : 50 அல்லது 40 : 60 என்ற விகிதத்தில்). 

** எனினும் இதற்கு மேல் அதிகரிக்கும் பொழுது, உங்களது சக்தியையும் விற்பனை திறனையும் ஆய்வு செய்து கொள்ளுங்கள்.

** சுகாதார அக்கரையுடைய நடுத்தர மக்களுக்கு, குறைந்த அளவு கொழுப்புடைய பால் தேவை. எனவே கலப்பின மாடுகள் மற்றும் எருமைகளை தனி வரிசைகளில் ஒரே கொட்டகையில் வைத்து கலப்பு பண்ணையை வைக்க வேண்டும்.

** உடனடியாக பால் விற்பனை செய்ய, அதிக தேவை இருக்கும் விற்பனை இடங்களைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். 

** இரண்டு வகைப் பாலையும் கலந்து தேவைக்கேற்ப விற்பனை செய்யவும். 

** ஹோட்டல் மற்றும் சில பொதுவான வாடிக்கையாளர்களுக்கு (30%) எருமைப்பால் தேவைப்படும். மருத்துவமனைகள் பசும்பாலை விரும்புகின்றன.

2.. அதிகம் பால் தரக்கூடிய இனங்களின் குணாதிசயங்கள்

** கவர்ச்சியான தோற்றத்துடன், திடமாகவும், அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, அனைவரையம் கவரும் வகையில் இருக்க வேண்டும்.

** உடல் அமைப்பு உளி வடிவில் இருக்க வேண்டும்.

** கூர்மையான கண்கள், மெலிந்த கழுத்து பெற்றிருக்க வேண்டும்.

** மடி அடிவயிற்றுடன் நன்கு இணைந்து இருக்க வேண்டும்.

** மடியின் தோலின் இரத்தக் குழாய்கள் நன்றாக இருக்க வேண்டும்.

** மடியின் நான்கு பகுதிகளும் நன்கு பிரிந்து நல்ல காம்புகளும் இருக்க வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios