வாடல் நோயிலிருந்து பருத்தி செடிகளை மீட்கும் வழிகள் இதோ...
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பருத்தியில் வாடல் நோய் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக, பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி, செடிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை.
மேலும், சல்லி வேர்கள் தண்ணீரை உறிஞ்சவில்லை.
நோய் தாக்கப்பட்ட பருத்தி வயல்களில், தண்ணீரை உடனடியாக வெளியேற்றி, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலும், பசுந்தாள் உர பயிர்களை, இடையே சுழற்சியாக சாகுபடி செய்ய வேண்டும்.
பிற செடிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க, ‘டிரைக்கோ டெர்மா விரிடி’ என்ற மருந்தை இரண்டு கிராம் அளவு, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, செடிகளை சுற்றி ஊற்ற வேண்டும்.
இவ்வாறு செய்தால், வாடல் நோயிலிருந்து பருத்தி செடிகளை மீட்கலாம்.