வெள்ளாடு வளர்ப்பில் பால் உற்பத்தியை பெருக்க தீவனம் கொடுக்க வேண்டிய முறை இதோ...
வெள்ளாடுகள் பால் உற்பத்தித் திறன் மிக்கவை. ஒரே அளவு தீவனத்தைக் கொண்டு, வெள்ளாடுகள் பசுக்களைவிட அதிக பால் உற்பத்தி செய்ய வல்லவை. பசுவிற்குத் தீவனத்தைப் பாலாக மாற்றும் திறன் 38% என்றால், வெள்ளாட்டுக்கு 45% முதல் 71% ஆகும். ஆகவேதான் வெள்ளாடுகள் ஏழையின் பசு எனப்படுகிறது.
பொதுவாகவே எல்லா வலங்கினங்களிலும் பால் உற்பத்தி மிகத் திறனுடையதாகும். உடல் வளர்ச்சிக்கு அதிகத் தீவனத்தை உண்ண முடியாத வெள்ளாடுகள் பால் உற்பத்திக்கு உடல் எடையில் 8% வரை தீவனம் உண்ணப் கூடியவை. இந்த அளவை ஏற்க ஏதுவாக அகன்ற பெருவயிறு உள்ளது.
வெள்ளாடுகள் கலப்புத் தீவனம் இன்றியே தரமான தழை உண்டு முழு அளவு பால் வழங்கக் கூடியவை. எனினும், நமது நாட்டுச் சூழ்நிலையில் உயர்ந்த தழை எப்போதும் கிடைக்காததால், கலப்புத் தீவனம் இன்றியமையாதது.
இதனால் குட்டிகளுக்குத் தேவையான பால் கடைப்பதுடன், சிறிதளவு விற்பனைக்கும் பால் கறந்து கொள்ள முடியும். ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு 300 – 400 கிராம் கலப்புத் தீவனம் தேவை.
ஆடுகளுக்குச் சினையான கடைசி ஓரிரு மாதங்களில் 300 – 400 கிராம் கலப்பும் தீவனம் அளிப்பது அவை நன்கு பால் கொடுக்கவும் குட்டிகளின் வளர்ச்சிக்கும், உதவியாக இருக்கும்.