வெள்ளாடுகளுக்கு தீவனமாக பயன்படும் சில மொச்சையினப் பயிர்கள் இதோ...

Here are some spinach crops used as feed for goats ...
Here are some spinach crops used as feed for goats ...


வெள்ளாடுகளை அதிகளவில் வளர்க்கும்போது மரத்தழைகள், புற்கள் மட்டுமின்றி மொச்சையினப் பயிர்களை வளர்த்தும் தீவனமாக அளிக்கலாம். 

இதோ சில மொச்சையினப் பயிர்கள்..

1.. குதிரை மசால் (Lucerne)

இது மிகச் சிறந்த பசுந்தீவனமாகும். இதனைப் பசுமையாகவும், காயவைத்தும் ஆடுகளுக்கு அளிக்கலாம். ஆனால் குதிரை மசால் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் நன்கு வளர்வதில்லை. 

கோவை, பெரியார், சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில பகுதிகளில் குதிரை மசால் பலன் கொடுக்கின்றது. மற்ற மாவட்டங்களில் இது பயிரிட ஏற்றதில்லை. இது ஒரு பல்லாண்டுப் பயிர்.

இதை விதைக்க ஏற்ற காலம் அக்டோபர் – நவம்பர் மாதமாகும். ஒரு எக்டேருக்கு 15 முதல் 20 கிலோ விதை தேவைப்படும். இதனை 20-25 செ.மீ., இடைவெளியில் வரிசையாகப் பயிரிடலாம். அல்லது தூவி விதைத்து விடலாம்.

வாரம் ஒரு முறை முதல் கட்டாயமாகவும், பின் 10-12 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். தழைச் சத்து 30 கிலோ, மணிச் சத்து 100 கிலோ தேவை.

70 நாட்களுக்குப் பின் முதலட அறுவடையும், பின் 25-30 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். ஆண்டில் 6 முதல் 7 தடவை அறுவடை செய்து, 60 முதல் 70 டன் பசுந்தீவனம் பெறலாம். புரதம் 20% அளவில் இப்புல்லில் உள்ளது.

2.. ஸ்டைலோ (Stylosanthes)

இப்பயிரைக் குதிரை மசால் பயிரிட முடியாத மற்ற இடங்களில் பயிரிடலாம். ஒரு எக்டேருக்கு 20-25 கிலோ விதை தேவைப்படும்.வரிசைக்கிடையே 30 செ.மீ., இடைவெளி கொடுக்க வேண்டும். 

தழைச் சத்து 30 கிலோவும், மணிச் சத்து 60 கிலோவும் தேவை. கோடையிவ் 20-30 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

முதல் அறுவடை 65-70 நாட்களிலும், பின் 35-45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம்.

ஆண்டில் 3 முதல் 5 முறை அறுவடை செய்து 30 முதல் 35 டன் பசுந்தழை பெறலாம். இப்புல்லில் புரதம் 18-20% அளவில் உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios