Asianet News TamilAsianet News Tamil

மிளகாயை தாக்கும் பூச்சிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் எளிய முறைகள் இதோ...

Here are some of the simplest ways to control chilli pests and control them.
Here are some of the simplest ways to control chilli pests and control them.
Author
First Published Jul 2, 2018, 1:06 PM IST


மிளகாயை தாக்கும் பூச்சிகள் 

1.. இலைப்பேன்

இது, இலையில் உள்ள சாற்றை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் இலை மஞ்சள் நிறமாக மாறும். இப் பூச்சியில் தாக்குதல் காணப்பட்டால் ஒரு ஏக்கருக்கு 50 லிட்டர் தண்ணீரை தெளிப்பான் மூலம் தெளிப்பதால் இலைப்பேன் கொட்டிவிடும். 

அதிகம் இலைப்பேன் இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி. டைமீட்டோடேட் 30 இ.சி என்ற மருந்தை கலந்து தெளிக்க வேண்டும்.

2.. அசு உணி

அசு உணி என்ற பூச்சி சாறு உறிஞ்சும் தன்மை கொண்டது. செடிகளில் கருப்பாகப் படிந்திருக்கும். சர்க்கரை போன்ற திரவத்தை வெளியேற்றும். இந்த பூச்சி தாக்கினால் "மொசைக்' என்ற நோய் உருவாகும். இதனால், இலைகள் சுருங்கும். இந்நோயை தடுக்க மிளகாய் தோட்டத்தில் 5 வரிசைக்கு இடையில் இரு வரிசை மக்காச்சோளம் நட வேண்டும்.

3.. செஞ்சிலந்தி

இப்பூச்சி கண்ணுக்குத் தெரியாது. தொலை நோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். இப்பூச்சி தாக்கினால் இலை திட்டு, திட்டாக மஞ்சள் நிறமாக மாறும். இப்பூச்சி தாக்குதலால் உண்டாகும் நோயை முரணை நோய் என்பர். இந்நோய் தாக்கினால் மிளகாய் வளைவாக மாறும்.

இப்பூச்சியைக் கட்டுப்படுத்த டைகோபால்ட் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு மி.லி. வீதம் கலந்து ஒரு ஏக்கருக்கு 500 மி.லி. தெளிக்க வேண்டும். நனையும் கந்தகம் ஒரு லிட்டர் தண்ணீரில் 6 கிராம் கலந்தும் தெளிக்கலாம்.

4.. காய்துளைப்பான் 

இவ்வகை பூச்சி தாக்கினால் காய், தண்டு ஆகியவற்றில் புழுக்கள் துளையிடும். ஆரம்ப நிலையாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வைத்து தாய்ப் பூச்சிகளை அழிக்கலாம். அதேபோல், ஒரு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறி வைத்தும் அழிக்கலாம். 

இப்பொறிகள் வைக்கும்போது கீழே தண்ணீரும், அதில் 2 சொட்டுகள் மண்ணெண்ணெயும் விட்டு வைக்க வேண்டும். டிரைக்கோ கிராமா கைலோனா என்ற ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 12 இடத்தில் கட்டியும் இப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

அதேபோல் மிளகாய் செடிக்கு அருகில் உளுந்து செடி, பாசிப் பயிறு செடி நட்டால் அதன் மூலம் நன்மை தரும் பூச்சிகள் பெருகி மிளகாய் விளைச்சல் நன்றாக இருக்கும் என்றார் அவர்.

விவசாயிகள் மிளகாயைப் பயிரிடும்போது வேளாண் அலுவலர்களின் ஆலோசனைப்படி முறையான பயிர் மேலாண்மையை மேற்கொண்டால் அதிக மகசூலைப் பெற முடியும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios