ஆடுகளை பாதிக்கும் நோய்கள்:
 
1.. கோமாரி நோய்

அறிகுறிகள்

நாக்கு, மடி மற்றும் குளம்புகளுக்கிடையில் கொப்புளமும் புண்ணும் காணப்படுதல், தீவனம்எடுக்க இயலாமை, காய்ச்சல், குட்டிகளில் இறப்பு, சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படுதல்.

சிகிச்சை

சமையல்சோடா உப்புக் கலந்த நீரில் கால் மற்றும் வாய்ப்புண்களை கழுவி மருந்திடுதல்.

போரிங் பவுடருடன் கிளிசரின் கலந்து வாயில் தடவவேண்டும்.

2.. வெக்கை சார்பு நோய்

இது செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளைத் தாக்கும் மிகக்கொடிய தொற்றுநோய் ஆகும்.

அறிகுறிகள்

வாய்ப்புண், மூச்சுத்திணறல், கழிச்சல், கண் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல், காய்ச்சல்.

தடுப்பு முறை

தடுப்பூசி போடுதல் அவசியம்.

3..ஆட்டு அம்மை

வெள்ளாடுகளை விட செம்மறியாடுகளையே அதிகம் தாக்குகிறது.

அறிகுறிகள்

உதடு, மூக்கு, கண் இமை, காது, காலின் அடிப்பகுதி, மடி, இனப்பெருக்க உறுப்பு போன்றஇடங்களில் முத்துப்போன்ற அம்மைக் கொப்புளங்கள் காணப்படுதல், காய்ச்சல், உணவுஉட்கொள்ளாமை.

4.. நீலநாக்கு நோய் 

அறிகுறிகள்

காய்ச்சல், சளி, தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், சளி கொட்டியாவதால் மூக்கடைப்புஏற்படுதல், நான்கு நாட்களில் உதடு, மூக்கு, நாக்கு, குளம்பின் மேல் பகுதி மற்றும் கீழ்த்தாடைவீங்குதல், நாக்கு நீல நிறமாக மாறுதல், தீவனம் உட்கொள்ளாமை மற்றும் ஒரு வாரத்தில்இறந்து விடுதல்.

சிகிச்சை

போரிங் பவுடரைத் தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்கு தினம் இரு முறைபோடவேண்டும்.

நோய் எதிர்ப்பு மருந்துகள் 5 நாட்களுக்குள் கொடுக்கவேண்டும்.

மென்மையான தீவனங்களை கொடுக்கவேண்டும்.

5.. நுண்ணுயிரி நோய்கள் அடைப்பான்

அறிகுறிகள்

எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லாமல் திடீர் இறப்பு, இறந்தபின் ஆசனவாய், மூக்கு, காதுபோன்றவைகளிலிருந்து உறையாத கருஞ்சிவப்பு இரத்தம் வெளியேறுதல்.

தடுப்பு முறை

இறந்த ஆடுகளை ஆழமாகக் குழிவெட்டி சுண்ணாம்புத் தூள் தெளித்து மூடிவிடவேண்டும்.தடுப்பூசி போடுதல் அவசியம்.