மாடு வளர்ப்பை விடவும் வெள்ளாடு வளர்ப்பில் அதீத லாபம் பார்க்கலாம்; பாரமரிப்பும் குறைவு...

Grow in the goat growth can be more profitable than cow rations Lack of burden ..
Grow in the goat growth can be more profitable than cow rations Lack of burden ...


மாட்டு வளர்ப்புக்கு கொஞ்சம் வறட்சியான ஏரியாவில் வளர்ப்பது என்பது கடினம். ஆனால் ஆட்டை வறட்சியான ஏரியாவிலும் நன்கு வளரக்கூடியது. மானாவாரியான நிலம் வைத்திருப்பவர்களும் எளிதாக வளர்க்கலாம். லோனும் கிடைக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளும், பெண்களும் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பை ஆரம்பிக்கலாம். 

தமிழ்நாட்டின் காலநிலைக்கு ஆடு வளர்ப்பது அற்புதமான வாய்ப்பு அமைப்பு ஆகும். மேலும், இறைச்சியின் விலையும் அதிகரித்து வருவதால் தொடர்ந்து லாபம் பெறுவதற்கு வாய்ப்பு. விற்பதற்கு சந்தையை நோக்கி ஓட தேவையில்லை. தேவையானவர்கள் உங்களை நோக்கி ஓடி வருவார்கள். அந்தளவிற்கு தட்டுபாடு நிலவி வருகிறது.

மாடு வருடத்திற்கு ஒரு முறைத்தான் கன்று போடும். ஆனால் ஆண்டுக்கு இரண்டு முறை குட்டி போடும். இதில் ஒரு தடவை இரண்டு குட்டி போடும் வகையாக தேர்வு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். அதுவும் உயர்தர கலப்பின ரகத்தை தேர்ந்தெடுத்தால் ஆறு மாத வளர்ப்பிலேயே நல்ல வருமானம் கிடைக்கும். இதுவே இரண்டு மூன்று வருடங்கள் வளர்த்தால் பெரிய அளவில் பணம் பார்க்கலாம். 

மேலும் பெரிய அளவில் ஆடு வளர்க்கும் போது ஆட்டு எருவிற்கும் நல்ல வரவேற்பு இருப்பதால் அதனை விற்று காசக்கலாம். உங்களிடம் இடமிருக்கும் பட்சத்தில் ஒரு சிறிய கொட்டகை போட்டும் வளர்க்கலாம். உங்களிடம் நிலம் இருந்தால்  தீவனங்களையும், புல்களை வளர்த்துக் கொடுத்துக்கலாம்.

தகுந்தமுறையில் வளர்க்கும் போது ஆட்டிற்கு பெரிய அளவில் நோய் தாக்குதல் இல்லை. ஆடு வளருமிடத்தில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வெயில் இருக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். 

கற்றோட்டமான இடம், நல்ல அடர் தீவனம், தேவையான சமயத்தில் உரிய தடுப்பூசிகளையும், குடல்புழு நீக்கமும், ஒட்டுண்ணி நீக்கமும் செய்ய வேண்டும். வயிற்றுபோக்கு, சளி மற்றும் இதர பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட வேண்டும்.

வெள்ளாடுகள் விரிகுளம்புகளை உடைய அசைபோடும் விலங்கினம். பழங்காலந்  தொட்டே மனிதனோடு இசைந்து வாழும் விலங்கினங்களில் ஒன்று. கால்நடைகளில் மனிதனோடு முதலில் தோழமை கொண்டவை வெள்ளாடுகளே. ஆடுகள் எல்லாச் சூழ்நிலையிலும் வாழக் கூடியவை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios