கால்நடைகளுக்கு சுத்தமான தண்ணீரை கொடுக்கணும். ஏன்? தண்ணீரை சுத்தப்படுத்துவது எப்படி?
கால்நடைகளுக்கு சுத்தமான தண்ணீர்
** கால்நடைகளுக்கு அளிக்கப்படும் நீரானது, சுத்தமாகவும், கிருமிகள் இல்லாமலும், துர்நாற்றமில்லாமலும் இருத்தல் மிகவும் அவசியம்.
** அசுத்தமான நீரின் மூலம் பல நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அவை குடற்புழு நோய்கள், பாக்டீரியா எனும் நுண்ணுயிரி மூலம் உண்டாகும் அடைப்பான், தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள், நைட்ரேட், அம்மோனியா போன்ற தாது உப்புக்களினால் உண்டாகும் நோய்கள் போன்றவையாகும்.
** இதுபோன்ற தாது உப்புக்களினால் உண்டாகும் நோய்கள் கோழிகளில் பேரிழப்பை உண்டாக்கக் கூடும்.
** கால்நடைகளுக்கு அளிக்கும் நீருடன் சாக்கடை அல்லது கழிவுநீர் கலக்காமல் பார்த்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம். இதனால் நோய் உண்டாக்கும் கிருமிகள் குடிநீருடன் கலந்து கால்நடைகள் மற்றும் கோழிகளீல் பெரும் சேதத்தை விளைவிக்கலாம்.
சுத்தப்படுத்தும் முறை:
** கால்நடைகளுக்கு அளிக்கும் நீரை கீழ்க்கண்டவாறு சுத்தப்படுத்தி பின்பு உபயோகிக்கலாம்.
** குளோரின், ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆகியவற்றை கால்நடைகளுக்கு அளிக்கும் நீரில் கலந்து அளிப்பதால் நீரில் உள்ள நோய் உண்டாக்கும் கிருமிகள் அழிந்து நீர் சுத்தப்படுகிறது.
** பாலிபாஸ்பேட் எனும் இரசாயனப் பொருளை நீருடன் கலந்து உபயோகிப்பதால் கால்சியம் கார்பனேட் போன்ற உப்புகள் படியாமல் தடுக்கிறது.
** புற ஊதாக்கதிர்களைக் கொண்டு நீரை சுத்தம் செய்யும் முறையும் வழக்கத்தில் உள்ளது.