அளவுக்கு மிஞ்சிய யூரியா, நெற்பயிருக்கு நஞ்சே…
நெற்பயிரில் தழைச் சத்தாக அளிக்கும் யூரியா உரத்தை அதிகமாக போட்டால், நோயின் தாக்கம் அதிகரிக்கும் என்று தெரியாமல் விவசாயிகள் உரத்தை அதிகமாக போட்டுவிட்டு பின்னர் அவதிபடுவர்.
உண்மையில் அதிக யூரியா நோயின் தாக்கத்தை அதிகரிக்கவே செய்யும்.
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அதிக யூரியாவை பயன்படுத்தாமல் இருப்பதும் ஒரு வழியே.
நெற்பயிரைத் தாக்கும் முக்கிய பூச்சிகளான இலைப்பேன், தண்டு துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு, புகையான், பச்சை தத்துப்பூச்சி மற்றும் கதிர்நாவாய் பூச்சிகளை ஒருங்கிணைந்த முறைகளான விதை நேர்த்தி, விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறியமைத்து கட்டுப்படுத்தலாம்.
பூச்சிக்கொல்லிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பொருளாதார சேத நிலை ஏற்படும் பட்சத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
தழைச்சத்து உரமான யூரியாவைத் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதுதான் அனேக பூச்சி மற்றும் நோய்களுக்கு காரணமாக உள்ளது. எனவே, தழைச்சத்தினை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மூன்று அல்லது நான்கு தவணைகளாகப் பிரித்து இடுவது நல்லது. இதன்மூலம், பூச்சி மற்றும் நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம்.