Asianet News TamilAsianet News Tamil

தேவையான அளவு நீர்பாய்ச்சுவதால் கூட நெல்லில் கூடுதல் விளைச்சல் பெறலாம்…

Even the required amount of water can be obtained in the paddy.
Even the required amount of water can be obtained in the paddy.
Author
First Published Jul 6, 2017, 12:59 PM IST


நெற்பயிர் வளர்ச்சிக்கு தண்ணீர் அசியமாகும்.  மழை பெய்யும்போது தண்ணீரை நிலம் உறிஞ்சி கொள்கிறது.  மழை இல்லாத காலங்களில் பயிருக்கு தேவையான தண்ணீரைக் கொடுத்து வளர்ச்சி அடையச்செய்வதை நீர்ப்பாசனம் என்கிறோம்.

ரசாயன மாற்றங்கள்:

பயிர்களின் வளர்ச்சிக்காலத்தில் போதிய ஈரம் இருப்பது பயிர் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.  ஈரம் இல்லாவிடில் பயிர் வாடிவிடும்.  பாசன வசதியிருந்தால் பயிரின் வளர்ச்சிக்கு தேவையான நீரை தட்டுப் பாடில்லாமல் கொடுக்கலாம். இதனால் பயிர்கள் ஒரே சீராக வளர்ந்து விளைச்சலை தருகின்றன.

மேலும் ஈரம் இருந்தால் நிலத்தில் இடக்கூடிய அங்கக எருக்கள் சிதைந்து ரசாயன மாற்றங்களை அடைந்து பயிருக்கு உணவாக மாற்றப்படுகின்றன.  ஈரம் இல்லாவிட்டால் இத்தகைய மாற்றங்கள் நிலத்தில் நிகழ்வதில்லை.

நீர் நிர்வாகம்:

செடிகளில் சுமார் 90 சதவீதம் நீரால் ஆனது.  வெயிலில் இலைகள் மூலமாக செடிகளில் உள்ள நீர் ஆவியாக வெளியேருகிறது. இதனால் செடிகளுடைய திசுக்களின் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படுகிறது. அதிக வெப்பம் இருந்தால் ஆவியாக மாறும் நீரின் அளவு அதிகமாக இருக்கும் எனவே வெயில் காலம் இருப்பது அவசியம்.

நாற்றங்காலில் தேவையான அளவு ஈரப்பதம் இல்லையெனில், வெடிப்புகள் ஏற்படுவதுடன் வேர்கள் நீளமாக வளரும். மேலும் நாற்று பிடுங்கும்போது வேர்கள் அறுபட்டுவிடும். 

மேட்டுப்பாத்திகள் அமைப்பதினால் அதிகப்படியான தண்ணீர் வாய்க்கால் வழியாக வெளியே செல்ல வாய்ப்பாக இருக்கும். விதைத்த மூன்றாம் நாள், பாத்திகள் நனையும் வரை தண்ணீர் வாய்க்கால் வழியாக வெளியே செல்ல வாய்ப்பாக இருக்கும்.  விதைத்த மூன்றாம் நாள், பாத்திகள் நனையும் வரை தண்ணீர் கட்டவேண்டும். 

பிறகு 5-ம் நாளில் இருந்து பாசனம் செய்யப்படும் தண்ணீரின் அளவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 1.5 செ.மீ. வரை தண்ணீரை நிறுத்த வேண்டும். வளர்ந்த நாற்றங்காலுக்கு 2.5 செ.மீ. அளவிற்கு தண்ணீர் நிறுத்தவேண்டும்.

வயலில் நீர் நிர்வாகம்:

நாற்று நடவு செய்து 3-வது நாள் 2.5 செ.மீ. ஆழம் தண்ணீர் (உயிர் தண்ணீர்) பாய்ச்சவேண்டும். நட்ட ஏழு நாட்களுக்கு 2.5 செ.மீ. தண்ணீர் கட்டவேண்டும்.  நடவு செய்து 7-8 நாட்களுக்குப்பின் 5 செ.மீ. அளவு நீர் கட்டினால் போதுமானது. அதிகத்தூர் கட்டும் நிலைக்குப்பின் தண்ணீரை     ஓரிரு நாட்களுக்கு வடிக்கவேண்டும்.  அதன்பின் தண்ணீரை 5 செ.மீ. நீர் தொடர்ந்து நிறுத்தவேண்டும்.

நெற்பயிரில் பஞ்சு கட்டும் பருவம் தொண்டைக்கதிர் மண்ணிலிருந்து ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக நீர் தேங்கியுள்ள வயல்களில் அமிலத்தன்மை ஏற்பட்டு வேர்களுக்கு தேவையான பிராணவாயு குறையும்.  அவ்வயல்களில் நீரை வடித்து, சிறிய வெடிப்புகள் தோன்றிய உடன் தழைச்சத்து இட்டு, பிறகு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

களை கட்டுப்படுத்துதல்:

நெல் வயலில் எப்போதும் 5 செ.மீ. தண்ணீர் நிறுத்தி வைத்திருந்தால் களைகள் வளராமல் தடுக்கலாம்.  தண்ணீரின் அளவு 5 செ.மீட்டருக்கு மேலே சென்றாலும்களை கட்டுப்படுத்தப்படும். ஆனால் நெல்லில் தூர்கட்டுவது பாதிக்கப்படும்.

உரமிடும்போது தொடர்ந்து நிலத்தில் தண்ணீர் இருந்தால் நச்சுப் பொருட்கள் அதிகரித்து வேரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அவைகள் மண்ணிலுள்ள சத்தை உறிஞ்ச முடியாமல் போய்விடும். 

மேலும் இந்த நிலையில் தழைச்சத்து வீணடிக்கப்பட்டு நெற்பயிருக்கு கிடைக்காமல் போய்விடும்.  எனவே உரமிடும்போது நிலத்தில் ஈரம் இருந்தால் போதும்.  தண்ணீரை வடித்துவிட்டு பிறகு இரண்டு நாட்கள் கழித்து நீர் கட்டினால் உரத்தின் பயன் நன்றாக கிடைக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios