தென்னையில் இளங்காய்கள் உதிருகிறதா? இந்த மூன்று குறைபாடாக இருக்கும்...
இந்த மூன்று குறைபாடுகளாலும் தென்னையில் இளங்காய்கள் உதிரும்...
அ) ஊட்டசத்து குறைபாடு
முற்றிலுமாகவோ அல்லது போதுமான அளவிலோ உரமிடாலிருப்பதால் குரும்பைகள் உதிரும். பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை குறித்த காலத்தில் இடுவது குரும்பைகள் உதிர்வதைக் குறைப்பதற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.
ஆ) மகரந்த சேர்க்கை இல்லாமை
மகரந்து சேர்க்கை இல்லாததாலும் குரும்பைகள் மற்றும் தோப்பில் எக்டருக்கு பதினைந்து என்ற கணக்கில் தேனீ கூடுகளை ஏற்படுத்துவதால் கலப்பின சேர்க்கை அதிகரிக்கும். மேலும் தேனினால் கிடைக்கப்பெறும் கூடுதல் வருவாயினால் குறிப்பிட்ட பரப்பளவிற்குரிய நிகர லாபமும் அதிகரிக்கும்.
இ) உறார்மேன் பற்றாக்குறை
இனச்சேர்க்கை முடிந்த நிலையில் உள்ள பெண்பூக்கள், அதாவது குரும்பைகள், சில சமயங்களில் உதிரும். பாளை வெடித்த ஒரு மாதத்தில் மலர் கொத்தின் மீது 30 (அ) 20 (ஒரு லிட்டர் நீரில் 30 அல்லது 20) தெளிப்பதன் மூலம் காய்க்கும் சதவீதத்தை அதிகரிக்கலாம்.