Asianet News TamilAsianet News Tamil

வேலி மசால் எப்படி சாகுபடி செய்ய ஏற்ற பருவம் எது தெரியுமா? வாசிங்க தெரியும்...

Do you know what a seasonal season is best suited for cultivating a fence? Know you know ...
Do you know what a seasonal season is best suited for cultivating a fence? Know you know ...
Author
First Published Mar 1, 2018, 1:51 PM IST


வேலி மசால்

பருவம் : 

இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் ஜூன், அக்டோபர் மாதங்களில் விதைக்கலாம்.

உழவு : 

இரும்பு கலப்பை கொண்டு 2 அல்லது 3 முறை உழவேண்டும். தொழு உரம் அல்லது கம்போஸ் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.

பார்கள் அமைத்தல் : 

50 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

உரமிடுதல் : 

மண் பரிசோதனையின்படி உரமிடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். விதைப்புக்கு முன் அடியுரமாக முழுஅளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இடவும்.

விதையளவு : 

எக்டருக்கு 20 கிலோ விதை என்ற அளவில் பார்களின் இருபுறமும் தொடர்ச்சியாக விதைக்கவும். 3 பாக்கெட்டுகள் [600 கிராம் ரைசோபியம் உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.

நீர் மேலாண்மை : 

விதைத்தவுடன் பாசனம் செய்ய வேண்டும் மற்றும் மூன்றாவது நாளில் உயிர்ப்பு நீர்ப்பாசனம் செய்யவேண்டும். பின்பு வாரம் ஒரு முறை பாசனம் அளிப்பது சிறந்தத்து.

களை நிர்வாகம் : 

தேவைப்படும் போது களை எடுக்கவும். அறுவடை விதைத்த 90 நாட்களுக்குப் பிறகு 50 செ.மீ. உயரத்தில் முதல் அறுவடை செய்யவேண்டும். அடுத்தடுத்த அறுவடைகள் 40 நாட்கள் இடைவெளியில் செய்யவேண்டும்.

மகசூல்:

எக்டருக்கு 125 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும். கலப்புப் பயிர் விதைத்த 60 நாட்களுக்குப் பிறகு முதல் அறுவடையும், அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியிலும் செய்யவேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios