மக்க வைப்பதற்குத் தேவையான உயிர் உள்ளீடுகள் என்னென்ன தெரியுமா?
1.. கம்போஸ்ட் குவியல் அமைத்தல்
குறைந்தது, 4 அடி உயரத்திற்கு கழிவுகளைப் போட்டு அவற்றை குவியல் போட வேண்டும். மக்க வைக்கும் இம் சிறிது உயரத்திலும், நல்ல நிழலிலும் இருக்க வேண்டும். கழிவுகள் அனைத்தையும் நன்கு கலக்கிவிட வேண்டும்.
கரிமச்சத்து மற்றும தழைச்சத்து நிறைந்த கழிவுகளை மாற்றி மாற்றி அமைத்து இடையிடையே கால்நடை கழிவுகளையும் கலக்க வேண்டும். இவ்வாறு செய்த பின், அவற்றை நன்கு ஈரமாக்க வேண்டும்.
2.. மக்கு வைப்பதற்குத் தேவையான உயிர் உள்ளீடுகள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக்கலவை, மக்குதலை வேகமாக செய்யக் கூடிய பலவகை நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளது. மக்கக் கூடிய கழிவுகளுடன் இந்த நுண்ணுயிரிகளைச் சேர்க்காதபோது, அப்பொருட்களில் இயல்பாக இருக்கும் நுண்ணுயிரிகளே வளர்ந்து மக்குதலைச் செய்கின்றன. இதனால் மக்குதலுக்கு நீண்ட நாட்கள் ஆகின்றது.
அதேசமயம் நுண்ணுயிர்க் கூட்டக்கலவையைச் சேர்க்கும்போது, நுண்ணுயிர் செயல்பாடு முன்னரே தொடங்கி, குறைந்த காலத்தில் மக்குதல் நிறைவடைகிறது. ஒரு டன் பயிர்க்கழிவுக்கு, 2 கிலோ கூட்டுக்கலவை உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. 2 கிலோ கூட்டுக்கலவையை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கரைசலாக்கிக் கொள்ள வேண்டும்.
இக்கரைசலைக் குவித்து வைக்கப்பட்டுள்ள திடக்கழிவில் நன்றாகத் தெளித்து கலக்க வேண்டும். பசுஞ்சாணக் கரைசல், நுண்ணுயிரிகளுக்கு நல்லதொரு ஆதாரமாகும். ஆனால் அதிலுள்ள தேவையற்ற நுண்ணுயிர்கள் தேவையான நுண்ணுயிர்களோடு போட்டியிடுகின்றன.
எனினும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நுண்ணுயிர் கூட்டுக் கலவை கிடைக்காத பொழுது, பசுஞ்சாணக் கரைசல் நல்ல ஆதாரமாகும். ஒரு டன் பயிர்க்கழிவுக்கு, 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து, பயிர்க்கழிவின் மேல் தெளிக்க வேண்டும். பசுஞ்சாணக் கரைசலானது, தழைச்சத்திற்கும், நுண்ணுயிர்களுக்கும் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.