பூச்சிகளை கண்டறியும் கருவியால் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?
தானிய மூட்டைகளில் பூச்சிகளை கண்டறியும் கருவியால் கிடைக்கும் நன்மைகள்...
இக்கருவி மூலம் மூட்டைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களில் பூச்சிகளின் தாக்குதலை கண்டுபிடிக்க உதவுகிறது. இக்கருவியில் 1.8 – 2.0 செ.மீ விட்டமுடைய, 1.8 -2 மிமீ துளையிடப்பட்டும் உள்ள ஒரு குழாய் உள்ளது.
அக்குழாயின் ஒரு முனையில், வளைந்து காணப்படும். இந்த வளைந்த பகுதியுடன், பூச்சி சேகரிக்கும் கலனும் இணைக்கப்பட்டிருக்கும். முக்கிய குழாயின் மற்ற முனை மூடப்பட்டிருக்கும்.
நன்மைகள்
** உணவு தானிய சேமிப்புக்கிடங்குகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தானிய மூட்டைகளில், மூட்டைகளுக்கு சேதம் ஏற்படாமல் பூச்சிகள் இருப்பதை கண்டுபிடிக்க இக்கருவி உதவுகிறது
** இக்கருவிக்கு பூச்சிகளை பிடிக்க பொறி போன்ற பொருட்கள் தேவையில்லை
** மூட்டைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு அடுக்குகளிலுள்ள தானியங்களில் ஏற்பட்டுள்ள பூச்சிகளின் தாக்குதலை இக்கருவியின் மூலம் கண்டறியலாம்
** புகைமூட்டப்பட்ட பல்வேறு அடுக்கு தானியங்களில் புகைமூட்டப்பட்ட திறனை கண்டுபிடிக்க இக்கருவி உதவுகிறது
** விவசாயிகள் தானியங்களை மூட்டைகளில் சேகரிக்கும் போது, இக்கருவி பயன்படும்.