Asianet News TamilAsianet News Tamil

பயிர்களுக்கான பல்வேறு விதமான ஊட்டச்சத்துகளும் அவற்றின் முக்கியத்துவங்களும் ஒரு அலசல்...

Different Nutrients and Their Importance for Crops ...
Different Nutrients and Their Importance for Crops ...
Author
First Published Jul 9, 2018, 1:01 PM IST

துத்தநாகம்

** மாவுச்சத்து உருமாற்றத்திற்கு முக்கியமானது.

** சர்க்கரை உட்கொள்ளும் திறனை கட்டுப்படுத்துகிறது.

** நெற்பயிரில் துத்தநாகத்தின் செயலானது, நொதிப் பொருளின் உலோக செயல் ஊக்கியாக விளங்குகிறது.

** தாழ்வான நில நெற்பயிரில் துத்தநாகத்தின் பற்றாக்குறை பொதுவாக களர்மண் குறிப்பாக சுண்ணாம்புச்சத்து நிறைந்த மண்ணில் காணப்படுகிறது.

** நீர் மூழ்கிய மண்ணை விட மேட்டுபாங்கான மண்ணில், மண் மற்றும் இடப்பட்ட துத்தநாகத்தின் அளவு அதிகமாய் காணப்படுகிறது.

** மண் அமிழ்வு ஏற்படுத்தினால், மண் கரைசலில் துத்தநாகத்தின் செறிவு குறைகிறது.

** ஒரு டன் நெல்லுக்கு, 30-40 கிராம் துத்தநாகத்தை நெற்பயிர் அகற்றுகிறது.

போரான்

மெக்னீசியம்

** பச்சையத்தின் முக்கிய ஆக்கக் கூறாக விளங்குகிறது மெக்னீசியம்.

** பொதுவாக குறைந்த அளவு மெக்னீசியமே பயிர்களுக்குத் தேவைப்படுகின்றன. அதனால் சாம்பல்சத்து பற்றாக்குறைக்கு அடுத்தே, மெக்னீசியத்தின் பற்றாக்குறை காணப்படுகிறது.

கந்தகச்சத்து

** பச்சையம் உற்பத்தி, புரதச்சேர்க்கை மற்றும் பயிர் வடிவம் மற்றும் அதன் செயல்பாட்டிற்கு கந்தகச்சத்து முக்கிய பங்களிக்கிறது.

** வைக்கோல் மற்றும் செடித்தண்டுகளின் முக்கிய ஆக்கக்கூறாக கந்தகம் விளங்குகின்றது.

இரும்புச்சத்து

** பச்சையம் சேர்க்கைக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.

** மேட்டுப்பாங்கான நில மண்ணில் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

தாமிரசத்து

** “பிளாஸ்டோசையனின்” (தாமிரச்சத்து கொண்ட புரதம்) என்பதின் முக்கியக்கூறு தாமிரம்.

** சில உயிர்வழி நொதிப் பொருள்களின் முக்கியக் கூறாகும்.

** இனப்பெருக்க வளர்ச்சிக்கு முக்கியமானது.

** வேர் வளர்ச்சிப் பொருள் ஆக்கம் மற்றும் புரதச்சத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது.

மாங்கனீசு

** மாங்கனீசு,  நைட்ரேட் குறுக்கம் மற்றும் நிறைய சுவாச நொதிகளின் செயற் ஊக்கியாகும்.

** ஒளிச்சேர்க்கையின் போது உயிரியம் பரிமாற்றத்திற்கு மாங்கனீசு தேவைப்படுகிறது.

** மாவுப் பொருள் மற்றும் தழைச்சத்து ஆக்கநிலைகுழைவில் பங்களிக்கும் நொதிப் பொருள் அமைப்புகளுடன் செயலாற்றுகிறது.

** மண் இயற்கையாய் பெற்றிருக்கும் மாங்கனீசு சத்து போதுமானதாக இருக்கும்.

சிலிக்கான்

**  நெற்பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது.

** பயிர் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறனுக்கு முக்கிய தனிமமாக சிலிக்கான் விளங்குகிறது.

** உயிரற்ற மற்றும் உயிரிலுள்ள நோய்களின் தாக்குதலுக்கு சில பயிர்கள் இலக்காகும் தன்மையை சற்றே குறைக்கும் ஆற்றல் பெற்றது.

** சிலிக்கான் அளிப்பதால், பயிரின் வலிமை மற்றும் விறைப்புத் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.  இதனால் சிறந்த நெற்பயிர் மகசூல் கிடைக்கிறது.

** பயிர் வேர்கள் சிலிக்கான் சத்தை, சிலிக்கான்  அமிலமாக எடுத்துக் கொள்கிறது.

** நீரில் உள்ள சிலிக்கான் அமிலத்தை வேர்கள் உறிஞ்சிக் கொள்ளும் அளவும் சிலிக்கான் சத்தை  நெற்பயிர் எடுத்துக் கொள்ளும் அளவும் சமமனாது.  அதிக அளவு நீராவிப் போக்கு இருந்தால், சிலிக்கான் சத்தை எடுத்துக்கொள்ளும் அளவும் அதிகமாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios