Asianet News TamilAsianet News Tamil

மாடித்தோட்டம் வளர்ப்பு முறைகள்…

culture methods-terrace-garden
Author
First Published Nov 26, 2016, 3:12 PM IST


நிலம் வைத்திருப்பவர்கள் தான் விவசாயிகள் என்பதில்லை. வீட்டு மாடியில் கூட தோட்டம் அமைத்து விவசாயம் செய்யலாம்; ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கலாம்.

காளான் வளர்ப்பு, அசோலா வளர்ப்பு, ஆடு, மாடு வளர்ப்பை இணைத்து பண்ணை திட்ட மாதிரியை உருவாக்கலாம். இதை செயல்படுத்துவதற்கு 20க்கு 16 அடி அளவு காளான் குடில், இரண்டு சிமென்ட் தொட்டிகள், இரண்டு இளம் ஆடுகள், நான்கு கோழிகள், மாடியில் செடி வளர்க்க தேவையான பைகள், நாள் ஒன்றுக்கு 100 லிட்டர் தேவைப்படும்.

காளான் குடிலின் ஈரப்பதத்தை தக்கவைக்க நாள் ஒன்றுக்கு 40 – 50 லிட்டர் தண்ணீர் தெளிக்க வேண்டும். இதில் 15 லிட்டர் தண்ணீரை சுழற்சி முறையில் மீண்டும் பெற்று செடிகளுக்கு பாய்ச்சலாம். சிறிதளவு சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களை ஆட்டுச்சாணத்துடன் கலந்து அசோலா வளர்க்கலாம். அதை அறுவடை செய்து ஆடு, கோழிகளுக்கு தீவனமாக தரலாம்.

செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். அசோலாவை தீவனத்துடன் கலந்து ஆட்டுக்கு தருகிறேன். கோழிகளில் இருந்து முட்டை, இறைச்சி பெறலாம். ஆயிரம் சதுர அடி இடமிருந்தால் மாடியை ஒருங்கிணைந்த பண்ணை தோட்டமாக மாற்றலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios