மிளகாய் சாகுபடி செய்ய இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்து லாபம் பெறுங்க…

Cultivation method of chili
Cultivation method of chili


 

இந்தியாவில் அதிக அளவில் மிளகாய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு எக்டருக்கு சராசரியாக 860 கிலோ மகசூல் கிடைக்கிறது. உலக உற்பத்தியில் சுமார் 25 மூட்டை அளவு இந்தியாவில் உற்பத்தியாகிறது.

மிளகாய் உணவுப் பொருட்களில் காரத்தை சேர்ப்பதற்கும், சிகப்பு நிற கலரை கூட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

மிளகாய் மருத்துவ குணங்களையும் உடையது. ஹோமியோபதி மருத்துவத்தில் மிளகாய் பயன்படுகிறது. ஆலீத்ரைட்டிஸ், ரத்த அழுத்தம், காய்ச்சல் ஆகிய நோய்களுக்கு மருந்து தயாரிக்க மிளகாய் பயன்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மிளகாயில் 6 மூட்டை அளவு தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம், மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிளகாய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள்

மிளகாயில் கே1, கே2, கோ1, கோ2, கோ3, பிகேஎம்1, பிகேஎம்2 ஆகிய ரகங்களாகும்.

சாகுபடிக்கு ஏற்ற மண் மற்றும் பருவம்

சாகுபடிக்கு ஏற்ற பருவமான ஜனவரி, பிப்ரவரி, ஜுன் - ஜுலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்கள் சாகுபடிக்கு ஏற்ற மாதங்களாகும்.

நல்ல வடிகால் வசதியுடைய சத்துக்கள் நிறைந்த மணற்பாங்கான நிலம் சாகுபடிக்கு ஏற்றதாகும். மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை உள்ள நிலங்கள் மிளகாய் சாகுபடிக்கு உகந்ததாகும்.

நாற்றங்கால் தயாரித்தல்

ஒரு எக்டர் அளவு நடவு செய்ய ஒரு கிலோ அளவுள்ள தரமான விதை போதுமானது. ஒரு கிலோ அளவுள்ள விதையுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியினை கலந்து, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

ஒரு எக்டர் நடவு செய்ய 100 சதுரமீட்டர் அளவுள்ள நாற்றங்கால் போதுமானது. நிலத்தை கட்டியில்லாமல் நன்கு கொத்தி, 10முதல்15 நாட்களுக்கு ஆறவிட்டு, பிறகு 10 செ.மீ. உயரம் உடைய மேட்டுப்பாத்திகளில் கோடுகள் கிழித்து, அதில் விதை நேர்த்தி செய்த விதைகளை விதைக்க வேண்டும். பிறகு மணல் கொண்டு மூடிவிட வேண்டும்.

நடவு வயல் தயார் செய்தல்

நிலத்தை 4 அல்லது 5 முறை கட்டியில்லாமல் நன்கு புழுதியாக இருக்குமாறு நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது, 25 மெட்ரிக்டன் நன்கு மக்கிய தொழு உரத்தை இட வேண்டும். 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து, அதில் 30 செ.மீ. இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். கோ3 ரகத்தை பார்கள் அமைக்காமல் 30க்கு 15 செமீ இடைவெளியில் நடவு செய்யலாம். மண்ணின் தன்மைக்கேற்ப ஒரு வார இடைவெளியில் நீர்பாய்ச்ச வேண்டும்.

உரமிடுதல்

30கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய 66 கிலோ, மணிச்சத்து கொடுக்கக்கூடிய 375 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய 48 கிலோ மியூரியேட் ஆப் பொட்டர் ஆகிய உரங்களை அடி உரமாக இட வேண்டும்.

நடவு செய்த 30, 60 மற்றும் 90வது நாட்களில் 30 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய 66 கிலோ யூரியாவை மேல் உரமாக இடவேண்டும். சாம்பல் சத்திற்கு பொட்டாசியம் சல்பேட் உரத்தை இடுவதன் மூலம் மிளகாயின் தரத்தை உயர்த்தலாம்.

களை நிர்வாகம்

நடவு செய்த 15 முதல் 20 நாட்களில் ஒரு களை எடுக்க வேண்டும். 45வது நாளில் 2வது களை எடுத்து மண் அணைக்க வேண்டும். மிளகாயில் இரண்டு வரிசைகள் வெங்காயம் நடவு செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம். நடவு செய்த 20, 40, 60, 80வது நாட்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் 1.25மிலி டிரையகாண்டினால் தெளிப்பதன் மூலம் பூ, பிஞ்சு, மற்றும் காய்கள் உதிர்வதை கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

விதை நேர்த்தி

வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் ஏதாவது ஒன்றுடன் கலந்து விதை நேர்த்தி செய்து, கட்டுப்படுத்தலாம். மேலும் 2.5 கிலோ சூடோமோனாஸ் 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் இடவும்.

வயலில் தண்ணீர் தேங்கி இருக்காமல் பார்த்துக்கொள்ளவும். 2.5 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, ஒரு சதுர மீட்டருக்கு 4 லிட்டர் என்ற அளவில் ஊற்றவும். மேன்கோசெப் 2 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் இதில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

அறுவடை 
நடவு செய்த 90வது நாள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையாக 6, 7 தடவை மிளகாய் பழங்களை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த மிளகாய் பழங்களை காய வைத்து இருப்பு வைக்கலாம்.

மகசூல்

ஒரு எக்டருக்கு 2 முதல் 3 மெட்ரிக் டன் வரை வற்றல் மிளகாய் அல்லது 10 முதல் 15 மெட்ரிக் டன் பச்சை மிளகாய் கிடைக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios