கோ-43 மற்றும் பையூர் ரக நெல், கோ-11, கோ-12, கோ-13 ஆகிய கேழ்வரகு ரகங்கள் அதிக அளவு களர்தன்மையைத் தாங்கி வளரக்கூடியவை. கோ-24, கோ-25 ரக சோளம், பழைய பருத்தி ரகங்கள் (எம்.சி.யூ), கோ-5, கோ-6 ரக கம்பு, கோ-சி, 671 ஆகிய கரும்பு ரகங்கள் மிதமான களர் நிலங்களில் நன்றாக வளர்பவை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவை தவிர, சூரியகாந்தி, சவுண்டல் (சூபாபுல்), வேலிமசால், குதிரைமசால், வரகு, கொய்யா, இலந்தை, கருவேல், வேலிக்கருவேல், வேம்பு, சவுக்கு ஆகியவையும் களர் தன்மையை தாங்கி வளர்கின்றன.

பீன்ஸ், நிலக்கடலை, மக்காச்சோளம், மொச்சை, எலுமிச்சை ஆகியவற்றை களர்நிலங்களில் பயிரிடக்கூடாது.