சில பயிர்களுக்கான உழவு முறை…
கேழ்வரகு: இரண்டு அல்லது மூன்று முறை இயந்திரக் கலப்பையால் உழ வேண்டும். நாட்டு கலப்பை என்றால், ஐந்து முறை உழ வேண்டும்.
>
> மக்காச்சோளம் : சட்டிக் கலப்பையால் ஒரு முறை உழுது, கொத்துக்கலப்பையால் இரண்டு முறை உழ வேண்டும்.
>
> நிலக்கடலை : கொத்துக் கலப்பையால் இரண்டு அல்லது மூன்று முறை உழ வேண்டும். நாட்டுக் கலப்பை என்றால், மூன்று அல்லது 4 முறை உழ வேண்டும்.
>
> பொதுவாக, நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற பருமனான விதைகளுக்கு குறைந்த உழவும், நெல், சிறுதானியங்கள் போன்ற சன்னமான விதைகளுக்கு அதிக உழவும் தேவைப்படுகிறது. அப்படி விதைக்கும்போதுதான் விதை, மண் சரிசமமாக பிணைந்து விதை முளைப்பு முழுமையாகிறது. பயிர்களுக்கு ஏற்ற உழவு செய்வதால், உழவுக்கு ஆகும் செலவைக் குறைத்து நல்ல லாபம் ஈட்டலாம்.