கொக்குகளும் களை எடுக்கும்…

crane also-takes-on


கருப்புநிற குச்சிகால்கள், வெண்ணிற தேகம், மஞ்சள்மூக்குடன் கொக்குகள் கூட்டம் கூட்டமாக உழவுநிலத்தை நோக்கி படையெடுக்கின்றன. இவற்றின் வரவு எங்களின் செலவை குறைக்கும்,” என்கிறார் சமயநல்லூரைச் சேர்ந்த விவசாயி.

மினி டிராக்டர் மூலம் நிலத்தில் தொலியடிக்கும் இவரின் பின்னால் ஏராளமான கொக்குகள் பறந்து வருகின்றன. டிராக்டரின் முன்பற்களும், இருபக்க சக்கரங்களும் நிலத்தை கிளறிக் கொண்டே வர, மிக நேர்த்தியாக சக்கரத்திற்குள் விழுந்து விடாமல் தாழப் பறந்து நிலத்தை கிளறி புழு, பூச்சிகளை தின்கின்றன.

அந்த விவசாயி கூறுகையில், ”சொந்த டிராக்டர் வைத்துள்ளேன். காலையில் வேலையை துவங்கினால் முடியும் வரை கொக்குகள் கூடவே வரும்.

எங்கு டிராக்டர் ஓட்டினாலும் சரியாக தெரிந்து கொண்டு ஒருவாரம் வரை அங்கேயே தங்கி இரையை உண்ணும்.

உழுது நாற்று நடுவது வரை ஒருவாரம் அவற்றுக்கு நல்ல இரைதான்.

இதனால் நிலம் புழு, பூச்சியின்றி சுத்தமாகிறது,” என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios