பிரகாசமான லாபம் பார்க்க தேங்காய் நார் கயிறுகள் செய்யும் தொழில் செய்யலாம்...
தேங்காய் நாரிலிருந்து கயிறு தயார் செய்யும் தொழில்
இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் ஏக டிமாண்ட். நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கெனவே உலகள வில் இத்தொழிலில் இருக்கும் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகள் நமக்கு போட்டியாக வர இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதும் இன்னொரு பிளஸ் பாயின்ட்.
தென்னை மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும், அதற்குப் பக்கத்து ஊர்களிலும் உள்ளவர்கள் இந்தத் தொழிலை உடனடியாகத் தொடங்கலாம்.
தேங்காய் நார் கயிறுகள் கட்டடங்களுக்கு சாரம் அமைக்கவும் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கவும் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டடங்களுக்கு சாரம் அமைக்க கயிறுகள் பயன்படுத்தப்படும் வழக்கம் குறைந்ததாலும், கிணறுகள் இல்லாத நிலை உருவானதாலும் இந்தத் தொழிலில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது.
அதன்பிறகு தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ், மேட்கள் போன்றவை தயார் செய்யப்பட, இந்தத் தொழிலுக்கான எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கிறது.