வருமானம் தரும் கொத்தவரை…

cluster of-income


வறட்சி பூமியிலும் இருக்கும் நீரை கொண்டு கொத்தவரை சாகுபடி செய்து அதிக லாபத்துடன் சாதனை படைத்து வருகிறார் விருதுநகர் அருகே சின்ன பேராலியை சேர்ந்த விவசாயி ஜோதிபாசு.

பத்தாவது படித்து முடித்தவுடன் தனது குடும்பத்தினருடன் விவசாயத்தில் ஈடுபட்டு, தற்போது முழு நேர விவசாயியாக, கொத்தவரையை சாகுபடி செய்து அதிக லாபம் பெற்று சாதித்து வருகிறார்.
அவர் கூறியதாவது:

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் 15 சென்ட் நிலத்தில் விதைத்தேன். 30 நாளில் காய்கள் வந்தன. மூன்று நாட்களுக்கு ஒரு முறை 60 கிலோ காய்கள் கிடைக்கின்றன. கடந்த மாதம் வரை கிலோ ரூ.40 வரை விற்றதால் நல்ல லாபம் கிடைத்தது.

தற்போது சந்தையில் போதிய விலை கிடைக்காமல் இருந்தாலும், வருமானம் சீராகவே உள்ளது. இன்னும் 30 நாட்கள் வரை காய்கள் கிடைக்கும் என்பதால், மற்ற விவசாயத்தை விட இதில் லாபம் அதிகமாக உள்ளது.
தற்போது கோடை காலமாக இருப்பதால் ஆழ்குழாயில் தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நீர்மட்டம் கொஞ்சம் அதிகரித்தால் அனைத்து பரப்பிலும் கொத்தவரையை பயிர் செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன், என்றார்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios