மாட்டுக்கு யூரியா கொடுக்கலாமா? இந்த கேள்விக்கான பதிலை தெரிஞ்சுக்க இதை படிங்க...
கேள்வி 1:
பசு எத்தனை வகைகள் இருக்கின்றன? 24 வகைகள் இருக்கிறதா சொல்கிறார்களே உண்மையா? இறக்குமதி செய்யும் மாட்டிற்கும், நாட்டு மாட்டுக்கும் என்ன வித்தியாசம்?
பதில் :
மாட்டு வகைகள் 24 வகைகளுக்கு அதிகமாகவே இருக்கின்றன. இறக்குமதியாகும் மாடுகள் நம்ம நாட்டின் தட்பவெப்பநிலைக்கு வரும்போது தடுப்பு சக்தி குறைந்து விடுகின்றன. இதனால் தான் நாம் இறக்குமதி மாட்டு இனத்தை வளர்க்கும் போது மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டி இருக்கிறது.
வெளிநாட்டு மாட்டு இனங்கள் இங்கு வந்து தாக்குபிடிக்கும் சக்தியும் குறையும். மேலும், எந்தவிதமான நோய் தாக்குதலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள அடிக்கடி தடுப்பூசி போட வேண்டியும் இருக்கு. ஹெச் எஸ் சி கருப்பு வெள்ளை மாடுகள் நம்முடைய தட்பவெப்பநிலைக்கு ஏற்றதுஅல்ல.
வளர்க்கும் போது மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். வெயில் காலத்தில் மூச்சு வாங்கும். மேலும் பால் குறைந்து விடும். மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். தீவனம் அதிகளவில் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலைக்கு ஜெர்சி மாடுதான் சரியானவை.
கேள்வி 2:
மாட்டுக்கு யூரியா கொடுக்கலாமா?
பதில்:
அப்படி எதுவும் கொடுக்கக்கூடாது. ஒரு காலத்தில் வைக்கோலை யூரியா போட்டு வைத்திருப்பார்கள். அதைக் கொடுத்திருப்பார்கள். இப்போது அப்படி எல்லாம் கொடுத்து மாட்டின் பாதிப்பு உள்ளாக்கூடாது.
கேள்வி 3:
பசு மாட்டுக்கும், ஆட்டுக்கும் மழைக்காலத்தில் நோய் வந்தால் என்ன மாதிரியான கை வைத்திய முறையை கையாளலாம்?
பதில்:
மழைக்காலத்தில் கழிச்சல், வாய் கோணாய், கால் கோமாரி, வாய் கோமாரி வந்தால் பூவன்பழம் 3- 4 பழத்தை விளக்னெண்ணெய் அல்லது தோங்காய் பூ வை வெல்லம் கலந்து வாயில் கொடுத்து விடலாம்.
காலில் குளம்பில் புண் இருந்தால் வேப்பண் கொழுந்து, கல் உப்பு, மஞ்சளை சேர்த்து அரைத்து, மாட்டின் காலை நான்கு கழுவி தேய்த்து விட வேண்டும்.மழைக்காலத்திற்கு முன்பாகவே, உரிய தடுப்பூசி போடுவது நல்லது. நோய் வந்த பின்பு, எக்காரணத்தைக் கொண்டு தடுப்பூசி போடுவதை தவிர்க்கவும்.