Can the onion grow in the daughter

மஞ்சளில் ஊடுபயிராக வெங்காயத்தை தாரளாமாக பயிரிடலாம். இதனால் லாபம் நல்லாவே கிடைக்கும்.

மஞ்சள் விலை உயர்வு அதிகமாக கிடைக்கும். ஒருவேளை விலை சரியாக கிடைக்காத நேரத்தில் கூட வெங்காயம் கைக்கொடுக்கும்.

வெங்காயத்தின் விலை நன்றாக இருப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்பபே இல்லை.

மஞ்சள் பயிரிடும் போது ஊடுபயிராக பயிரிடப்படும் வெங்காயத்திற்கு என்று தனி கவனம் செலுத்த வேண்டியதில்லை. மஞ்சளுக்கு காட்டும் அதே கவனத்தைக் கொண்டே வெங்காயத்தையும் சாகுபடி செய்து விடலாம்.

ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி நல்ல மகசூலைப் பெறலாம். உங்களுக்கும் நல்ல காய் கறிகளை விற்றுள்ளோம் என்ற மனநிறைவு உண்டாகும்.