வாழையை தாக்கும் தண்டு கூன் வண்டு - அறிகுறிகள் முதல் தீர்வு வரை பார்க்கலாமா?

Banana tree attacking insects symptoms look up to the first solution
Banana tree attacking insects symptoms look up to the first solution?


வாழையை தண்டு கூன் வண்டு என்னும் பூச்சி தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கிறது.

தண்டு கூன் வண்டின் அறிகுறிகள்

தாய் வண்டானது சிவப்பு நிறத்தில் பெரியதாக இருக்கும். இது வாழைத் தண்டில் சிறு துளையிட்டோ அல்லது இலை உறைகளுக்குள்ளோ தனது முட்டைகளை இடும். இதிலிருந்து வெளிவரும் இளம் சேய்கள் தண்டினை துளைத்து ஊடுருவி சேதப்படுத்தும்.

தாய் வண்டு பொய்த்தண்டையும், சேய்கள் தண்டையும் உண்டு, வளரும் தண்டுகளை அழிக்கின்றன.

பொய்த் தண்டில் வட்ட வடிவ துளைகள் மற்றும் பிசின் போன்ற திரவவெளிப்பாடு ஆகியவை இக்கூன் வண்டின் இருப்பினை அறிய உதவுகின்றன.

தண்டு கூன் வண்டு ஒழிக்க 

நீம் அசால் என்பது இ.ஐ.டீ பாரி நிறுவத்தின் தயாரிப்பாகும். இது வேம்பினை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இரசாயனமற்ற பூச்சி கொல்லியாகும். இதன் பூச்சி கொல்லித் தன்மைக்கு காரணமாக இருப்பது அசாடிராக்டின் என்கிற வேதிப் பொருளாகும்.

பெருமளவில் சேதத்தை விளைவிக்கும் இந்த கூன் வண்டின் பாதிப்பைக் கட்டுப்படுத்த கோவை அருகே சிறுமுகையில் நேந்திரன் இரக வாழையில் நீம் அசால் 1.2 சதத்தை ஊசி மூலம் தண்டுகளில் செலுத்தி ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இந்த மருந்து வாழைக் கன்று நட்ட 5 மாதத்திற்குப் பின் 30 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தண்டில் செலுத்தப்பட்டது.

நீம் அசாலின் திறன் மோனோகுரோட்டோபாஸ் (1 சதவீதம் நீரில் கரையும் செறிவு) உடன் ஒப்பிடப்பட்டது. வயல்வெளி ஆய்வின் போது மோனோகுரோட்டோபாஸை (1 மி.லி.) நீருடன் (3 மி.லி.) கலந்து தண்டிற்கும் செலுத்தப்பட்டது. 

மேலும், நீம் அசாலை நீருடன் 4:4 என்ற விகிதத்தில் ( 4 மி.லி. நீம் அசால் + 4 மி.லி. நீர்) கலந்து செலுத்தப்பட்டு மோனோகுரோட்டோபாஸ் செலுத்திய மாதிரி திடலில் 92.8 இறப்பு சதவீதமும், நீம் அசால் செலுத்திய மாதிரி திடலில், 85.42 இறப்பு சதவீதமும் பதிவானது. 

மேலும், பாதிக்கப்பட்ட தண்டில் மோனோகுரோட்டோபாஸ் 1 சதவீதம் மற்றும் நீம் அசால் 4 சதவீதத்தையும் பூசும் போது இக்கூன்வண்டுகளின் தாக்கம் குறைந்துள்ளது.

மோனோகுரோட்டோபாஸ் பூச்சிகொல்லி தண்டில் ஊசி மூலம் மற்றும் மேற்பகுதியில் பூசியும் மேற்கொண்ட ஆய்வில் இந்த கூன்வண்டின் தாக்கம் வெளியுறையில் முறையே 87.99 மற்றும் 84.65 சதவீதம் குறைந்துள்ளது. மோனோகுரோட்டோபாஸ் 1 சதவீதம் மற்றும் நீம் அசால் 4 சதவீதம் ஆகியவற்றை தண்டில் பூசுவதால் உள் உறையில் இக் கூன்வண்டின் சேதாரம் முறையே 96.14 மற்றும் 95.65 சதவீதம் குறைந்து காணப்பட்டது.

மேலும், மோனோகுரோட்டோபாஸ் (1 மி.லி.) நீருடன் (3 மி.லி.) கலந்து தண்டிற்கும் செலுத்தப்பட்டது. மேலும், நீம் அசால் நீருடன் 4:4 என்ற விகிதத்தில் (4 மி.லி. நீம் அசால் + 4 மி.லி. நீர்) கலந்து செலுத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் தாய் வண்டுகளில் முட்டையிடும் எண்ணிக்கை முறையே 1.0 முட்டை/ 5 தாய் வண்டுகள் மற்றும் 1.4 முட்டை/ 5 தாய் வண்டுகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறாக நீம் அசால் ஆனது இரசாயன பூச்சி கொல்லியான மோனோ குரோட்டோபாஸ் உடன் ஒப்பிடும் போது அதற்கு இணையாக பொய் தண்டு கூன்வண்டினை கட்டுப்படுத்துகிறது. மேலும், சுற்றுப்புறச் சூழலையும் மாசுறாமல் பாதுகாக்கிறது.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios