Artificial heat at a low price of the incubators
கோழி, வான்கோழி, கினிக்கோழி மற்றும் ஜப்பானியக் காடைக் குஞ்சுகளுக்கு கோடை காலத்தில் இரண்டு வாரமும், குளிர் காலத்தில் மூன்று வாரமும் செயற்கை வெப்பம் அளிக்கும் உபகரணமே அடைக்காப்பான்.
அடைக்காப்பானில் செயற்கை வெப்பம் அளிக்க, மின்சார பல்பு பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், கோழிக்குஞ்சுகளின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மின்சார பல்பின் உயரத்தை மாற்றி அமைக்க வசதி உள்ளது.
இந்த அடைக்காப்பான் பாலிபுரோப்பிலின் மூலப்பொருளினால் உருவாக்கப்பட்டது. இது அதிக வெப்பத்தைத் தாங்கவல்லது.
ஒரு அடி உயரம் மற்றும் 3 அடி விட்டம் கொண்ட இந்த அடைக்காப்பானில் சுமார் 100 குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பம் அளிக்கலாம்.
எளிதில் சுத்தப்படுத்தி எங்கும் எடுத்துச் செல்லலாம்.
கருவியின் உற்பத்தி விலை ரூ 800.
