வான்கோழிகளில் செயற்கை முறையில் கருவூட்டலுக்கு இதெல்லாம் செய்ய வேண்டும்...

All this must be done for artificial insemination in turkeys ...
All this must be done for artificial insemination in turkeys ...


வான்கோழிகளில் செயற்கை முறையில் கருவூட்டல்

** சீதோஷ்ண நிலையினை பொருட்படுத்தாமல் செயற்கை முறை கருவூட்டலின் மூலம் அதிகமான கருவுற்ற முட்டைகளை வான்கோழிகளிடமிருந்து பெறமுடியும் என்பதே செயற்கை முறை கருவூட்டலின் நன்மையாகும்.

** வான்கோழி சேவலிடமிருந்து விந்தினை சேகரித்தல்

** விந்து சேகரிக்கும் போது வான்கோழி சேவலின் வயது 32 லிருந்து 36வாரங்களாக இருக்கவேண்டும்.

** விந்து சேகரிப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன் சேவல்களை தனியாகபிரித்து வைக்க வேண்டும்.

** சேவலை விந்து சேகரிக்கும் போது சரியாக கையாள வேண்டும். சேவலிடமிருந்து விந்து சேகரிக்க இரண்டு நிமிடங்களே போதும்.

** சேவல்கள் எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடியவை என்பதால் தொடர்ந்து ஒருநபரே கையாளவேண்டும்.

**  ஒரு வான்கோழி சேவலிடமிருந்து சராசரியாக 0.15 லிருந்து 0.30 மில்லி வரைவிந்து கிடைக்கும்.

** விந்தினை சேகரித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அதனை உபயோகித்துவிட வேண்டும்.

** சேவலிடமிருந்து ஒரு வாரத்தில் மூன்று முறையோ அல்லது ஒருநாள் விட்டுஒருநாளோ விந்தினை சேகரிக்கலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios