Asianet News TamilAsianet News Tamil

செம்மறியாடு வளர்ப்பு மற்றும அதன் பயன்கள் பற்றி ஒரு அலசல்...

A scrutiny of sheeps breeding and its benefits ..
A scrutiny of sheeps breeding and its benefits ...
Author
First Published Dec 28, 2017, 1:22 PM IST


செம்மறியாடு வளர்ப்பு:

செம்மறியாடு பல வித உபயோகமுள்ள நூல், இறைச்சி, பால், தோல் மற்றும் உரம் ஆகிய  பயன்களை தரக்கூடியது. இது வறண்ட மற்றும் பகுதி வறண்ட மற்றும் மலைப் பகுதிகளில் ஊரக பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கியமான பகுதியாக உள்ளது. ஆட்டிலிருந்து கிடைக்கும் உல்லன் நூல் மற்றும் ஆடுகளை விற்பதால் வருமானத்திற்கு ஒரு ஆதாரமாக வெள்ளாடு வளர்ப்பு விளங்குகிறது. 

செம்மறியாட்டின் பயன்கள் 

** செம்மறியாடுகளுக்கு என்று தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் கூடாரம் அமைக்க வேண்டியதில்லை. குறைந்த அளவு ஆட்களே பராமரிக்க போதுமானது.

** அடிப்படை பண்ணை அமைப்பது மிகவும் செலவு குறைந்தது. அதிலிருந்து வெள்ளாடு கூட்டத்தை விரைவில் அதிகப்படுத்தலாம்.

** செம்மறியாடு புல்லைத் தின்று நமக்கு இறைச்சியையும், உல்லன் நூலையும் தருகிறது.

** இலை பல வகையான செடிகளை உண்டு வளருகின்றன இவை களைகளை பெருமளவில் அழிக்கின்றன.

** வெள்ளாடுகள் போல் அல்லாமல், செம்மறியாடுகள் மரத்தை அதிகளவில் சேதப்படுத்தும்.

** ஆடு வளர்ப்பவர்களுக்கு, உல்லன் நூல், இறைச்சி மற்றும் உரம் ஆகிய மூன்று வகைகளில் வருமானத்தைத் தருகிறது.

** இதனுடைய உதட்டு அமைப்பின் உதவியினால் அறுவடை நேரத்தில் தானியங்களை சுத்தம் செய்ய முடியும். வீணாகப்போகும் தானியத்தை நல்ல பயனுள்ள பொருட்களாக மாற்ற முடியும்.

** மட்டன் என்பது ஒரு வகை இறைச்சியாக இந்தியாவில் இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த அதிகளவில் மட்டன் உற்பத்தி செய்யும் இனங்களை பெருக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios