ஜெர்மனி, இந்தியாவுக்கான தூதர்களை பணிநீக்கம் செய்த ஜெலன்ஸ்கி.. ஏன் தெரியுமா?
பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு மாற்றாக புது அதிகாரிகள் எப்போது நியமனம் செய்யப்படுவர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கு உக்ரைன் நாட்டுக்கான தூதர்களாக இருந்தவர்களை பணி செய்து விட்டதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து இருக்கிறார். ஜெர்மனி நாட்டுக்கான உக்ரைன் தூதரும் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி, இந்தியா, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கான உக்ரைன் தூதர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக விளாடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்து இருக்கிறார். பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கான மாற்று அதிகாரிகளை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார்.
உக்ரைன் தூதர் பணி நீக்கம்:
ரஷ்யா உடனான போரில் உக்ரைன் நாட்டுக்கு பொருளாதாரம் மற்றும் ராணுவ ரீதியில் உதவிகளை வழங்கி வரும் நிலையில், ஜெர்மனி நாட்டுக்கான உக்ரைன் தூதர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து உக்ரைன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், இந்த பணிகளுக்கு சுழற்சி முறையில் அதிகாரிகளை மாற்றுவது வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முறை தான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு மாற்றாக புது அதிகாரிகள் எப்போது நியமனம் செய்யப்படுவர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை:
ரஷ்யா உடனான போரை எதிர்கொள்ள சர்வதேச உதவி மற்றும் ராணுவ ஒத்துழைப்பு வழங்க உக்ரைன் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டுக்கு போர் தொடர்பாக பொருளாதாரம் மற்றும் ராணுவ ரீதியில் ஜெர்மனி உதவி செய்து வருகிறது. இந்த நிலையில், ஜெர்மனி நாட்டுக்கான தூதர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
உக்ரைன் நாட்டுக்கான ஜெர்மனி தூதராக 2014 முதல் அண்ட்ரி மெலின்க் 2014 பணியாற்றி வருகிறார். பெர்லின் அரசியலில் பல்வேறு தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அண்ட்ரி மெலின்க் நட்புறவு கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்டு வரும் அண்ட்ரி மெலின்க் ஜெர்மனி அரசியல்வாதிகள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆவார்.