Asianet News TamilAsianet News Tamil

இந்தியா போரை தொடங்கும்... ஆனால் நாங்க முடித்து வைத்து விடுவோம்.... பாகிஸ்தான் ராணுவம் கொக்கரிப்பு ...!!

பாகிஸ்தான் ராணுவம் கடந்த 20 ஆண்டுகளாக தீவிரவாதத்துக்கு எதிராக போரிட்டு வருகிறது. மற்றும் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் முழுமையாக தயாராக உள்ளது. 

yes Indian will start war Pakistan will be finish - Pakistan army
Author
Delhi, First Published Feb 1, 2020, 10:04 AM IST

பாகிஸ்தானை நமது ராணுவம் 10 நாளில் மண்ணை கவ்வ வைத்து விடும் என பிரதமர் மோடி கூறியதற்கு பதிலடி தெரிவித்துள்ளது, இந்தியா போரை தொடங்கும் ஆனால் நாங்கள் அதனை முடித்து வைத்து விடுவோம் என அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய மாணவர் படையின் ஆண்டு பேரணி நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், 

yes Indian will start war Pakistan will be finish - Pakistan army 

பாகிஸ்தான் இதுவரை 3 போரில் நம்மிடம்  தோல்வி கண்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து நம்முடன் மறைமுகப்போரில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க நமது ராணுவத்துக்கு ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் போதும் என தெரிவித்து இருந்தார். மோடியின் பேச்சுக்கு பாகிஸ்தான் ராணுவ செய்தி  தொடார்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபுர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; இந்தியா போரை தொடங்கும், ஆனால் நாங்கள் போரை முடித்து விடுவோம். 7-10 நாட்களில் அல்ல அந்த காலத்துக்கு முன்போ மற்றும் பிறகோ  முடித்து விடுவோம். பாகிஸ்தான் ராணுவம் கடந்த 20 ஆண்டுகளாக தீவிரவாதத்துக்கு எதிராக போரிட்டு வருகிறது.

yes Indian will start war Pakistan will be finish - Pakistan army

மற்றும் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் முழுமையாக தயாராக உள்ளது. 2019ல் இரு நாடுகளும் போரின் விளிம்பில் இருந்தது. ஆனால் தயார்நிலை மற்றும் சரியான பதிலடி வாயிலாக அமைதியை பாகிஸ்தான் ராணுவம் உறுதி செய்தது. ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வாவின் உயர்ந்த ராணுவ தந்திரம் தெற்காசியாவை பெரிய பேரழிவிலிருந்து காப்பாற்றியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios