கொழும்பு, அக். 22-

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான யாழ்பானத்தில் உள்ள யாழ்பான பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரை இலங்கை போலீசார் நேற்று சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்த போலீஸ் தரப்பில் கூறுகையில், “ யாழ்பானம் நகரில் உள்ள குள்ளப்பிடி பகுதியில் உள்ள கொக்குவில் சோதனைச் சாவடி பகுதியில் நேற்று அதிகாலை வந்துகொண்டிருந்த இரு பல்கலை மாணவர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர். முதலில் போலீசார் மாணவர்களை கொலை செய்யவில்லை என மறுத்தனர். ஆனால், உடற்கூறு ஆய்வுக்குப்பின் மாணவர்கள் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் எடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஒத்துக்கொண்டனர். இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிஅமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது