வுஹான் ஆய்வகத்தில் 3 விதமான கொரோனா கிருமிகள்..!! நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி தகவல்..!!
கொரோனா வைரஸ் சீனாவில் உருவானது என உலக நாடுகள் சந்தேகித்து வரும் நிலையில் , வுஹான் நகர ஆய்வகத்தில் வௌவால்களிடமிருந்து தோன்றிய 3 ரக கொரோனா கிருமிகள் இருப்பதாக அதன் இயக்குனர் கூறியுள்ளார் .
கொரோனா வைரஸ் சீனாவில் உருவானது என உலக நாடுகள் சந்தேகித்து வரும் நிலையில் , வுஹான் நகர ஆய்வகத்தில் வௌவால்களிடமிருந்து தோன்றிய 3 ரக கொரோனா கிருமிகள் இருப்பதாக அதன் இயக்குனர் கூறியுள்ளார் . ஆனாலும் அவை தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கோவிட்-19 கிருமித் தொற்றுடன் தொடர்புடையது அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவின் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த சீனாவையும் கபளீகரம் செய்தது . பின்னர் அது அங்கிருந்து மெல்ல அமெரிக்கா , ஐரோப்பா , ஆப்பிரிக்கா என பரவி தற்போது உலகம் முழுவதும் தனது கொடூர கரத்தை பரப்பியுள்ளது . கிட்டத்தட்ட 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் தோன்றிய இந்த வைரஸால் உலக வல்லரசான அமெரிக்காவே முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் 16 லட்சத்து 86 ஆயிரமாக உயர்ந்துள்ளது , சுமார் 99 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர் , இன்னும் சில மணி நேரங்களில் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடக்கும் என அஞ்சப்படுகிறது .
அதேபோல் பிரேசில் , ஸ்பெயின் , பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளும் மிககடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . மொத்தத்தில் மேற்கத்திய நாடுகள் கொரோனாவினால் ஈடு செய்ய முடியாத அளவிற்கு இழப்புகளை சந்தித்து வருகின்றன. வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் , அதில் பலனில்லை . உலகளவில் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு சீனாதான் காரணம் எனவும் , கொரோனா வைரஸ் சீனாவில் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியா சீனா மீது சர்வதேச விசாரணை வேண்டும் என கோரியுள்ளது , ஜெர்மன் தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள இழப்புக்கு சீனா பதில் சொல்லியே ஆக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது . கொரோனா வைரசுக்கு சீனா தான் காரணம் என உலக நாடுகள் சந்தேகித்து வரும் நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் சீனாவின் வுஹான் ஆய்வுக்கூடத்தில் இயக்குனர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் ,
அதில் வுஹான் அறிவகத்தில் வௌவால்களிடமிருந்து தோன்றிய 3 ரக கொரோனா கிருமிகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றன, இருப்பினும் அவைகள் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள covid-19 கிருமித் தொற்றுடன் தொடர்புடையவை அல்ல , கடந்த 2004ஆம் ஆண்டு சார்ஸ் பரவியதை அடுத்து வௌவால்கள் மூலம் அந்தக் கிருமிகளை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது . ஆய்வகத்தில் இருக்கும் கிருமி ரகங்கள் covid-19 உடன் சுமார் 80 விழுக்காடு மட்டுமே ஒன்றிபோவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது , வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்தது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது இந்த தகவல் அதை ஓரளவிற்கு உறுதி செய்வதாக உள்ளது. அதேபோல் வுஹானில் இருந்து தான் வைரஸ் கசிந்தது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக அமெரிக்கா கூறிவந்த நிலையில் அது தொடர்பான எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .