Asianet News TamilAsianet News Tamil

அசர​வைக்‍கும் 105 வயது முதியவரின் சாதனை!

world record
Author
First Published Jan 5, 2017, 9:22 PM IST


அசர​வைக்‍கும் 105 வயது முதியவரின் சாதனை!

பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட சாதனை நிகழ்ச்சியில், 105 வயது முதியவர் 22 கிலோ மீட்டர் தொலைவை, 1 மணி நேரத்தில் சைக்கிள் மூலம் கடந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். "சாதிக்‍க வயது தடையில்லை" என்பதையும் அவர் நிரூபித்துக்‍ காட்டியுள்ளார். 

பிரான்ஸைச் சேர்ந்த ராபர்ட் மார்சண்ட் என்பவர், சைக்‍கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 105 வயது ஆகும் நிலையிலும் சாதனை படைக்‍க ஆர்வம் கொண்டிருந்தார். சைக்‍கிள் மூலம் நீண்ட தூரத்தை கடக்‍க விரும்பியவர், அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார்.

பாரீஸ் அருகே ஒரு விளையாட்டு மைதானத்தை தேர்வு செய்த அவர், ஏராளமான பார்வையாளர்கள் முன்னிலையில், அவர் களமிறங்கினார். ஓடு தளம் பதிக்‍கப்பட்ட பாதையில் மிக விரைவாக அவர் சைக்கிளை செலுத்தினார். 

1 மணி நேரத்தில் அவர் 22.5 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தினார். அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கைதட்டி ஆரவாரம் செய்து அவருக்‍கு பாராட்டு தெரிவித்தனர். 

1911-ம் ஆண்டில் பிறந்த இவர், தனது 14 வயதில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகினார். பின்னர் தனது 67 வது வயதில் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டினார். 2012-ம் ஆண்டில் அதாவது தனது 100-வது வயதில் 4 மணி 17 நிமிடம் 27 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி ஏற்கெனவே சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்‍கது.

Follow Us:
Download App:
  • android
  • ios