சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் பீதி கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 965 பேராக உயர்ந்துள்ளது. 180க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ், இதுவரை 7 லட்சத்து 21 ஆயிரத்து 330 பேரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. 

பொருளாதார சரிவு, ஒரு வேலை உணவின்றி தவிக்கும் மக்கள், உயிர் பலி கேட்கும் கொடூர நோய் என உலக நாடுகள் அடுத்தடுத்த பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன. பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். 

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

இந்நிலையில் சர்வாதிகாரி ஆட்சி புரியும் வடகொரியாவில் கொரோனாவின் தாக்கம் உள்ளதா?, அங்கு மக்கள் யாராவது கொரோனாவால் உயிரிழந்துள்ளனரா? என எவ்வித தகவலும் இல்லை. இப்படி நெருக்கடி நிலையில் கூட  வடகொரிய அதிபர் செய்துள்ள காரியம் உலக நாடுகளை திடுக்கிட வைத்துள்ளது. 

இதையும் படிங்க: சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் "மஹா" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிராக போராடி வரும் நிலையில், நேற்று வடகொரியா 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென்கொரிய ராணுவம் பகீர் தகவலை அம்பலப்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: தினமும் 5 ஆயிரம் பேருக்கு வயிராற சாப்பாடு... சைலன்டாக சேவை செய்யும் பிரபல நடிகை...!

வடகொரியாவின் வோன்சான் கடற்கரையில் இருந்து, குறுகிய தூரத்திற்கு சென்று தாக்கும் 2 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் 230 கி.மீ தொலைவுக்கு 30 கி.மீ உயரத்தில் சென்று இலக்கைத் தாக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. உலகமே கொரோனா எனும் அரக்கனை ஒழிக்க மருந்து கண்டுபிடித்து கொண்டிருக்கும் போது, வடகொரியா செய்துள்ள இரக்கமற்ற இந்த செயல் கடும் கண்டனங்களை உருவாக்கியுள்ளது.